Advertisement

அடிக்கல் நாட்டு விழா: அமெரிக்கா வாழ் இந்தியர்கள் கொண்டாட திட்டம்

  • எழுத்தின் அளவு:

வாஷிங்டன்: ராமர் கோவிலுக்கு நாளை(ஆக.,5) அடிக்கல் நாட்ட உள்ள நிலையில், அமெரிக்க கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தவும், வீடுகளில் விளக்கேற்றவும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் திட்டமிட்டுள்ளனர்.



ஹிந்துக் கடவுள் ராமருக்கு, அயோத்தியில் கோவில் கட்டுவதற்கான, பூமி பூஜை, நாளை (ஆக.,5) நடக்க உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட உள்ளார். விழாவையொட்டி அயோத்தி நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்நிலையில், ராமர் கோவில் பூமி பூஜை விழாவை, சிறப்பாக கொண்டாட அமெரிக்க வாழ் இந்தியர்கள் திட்டமிட்டுள்ளனர்.


nsmimg795959nsmimg


ராமர் கோவிலுக்கு பூமி பூஜை நடைபெறும் நேரத்தில், வீடுகளில் விளக்குகள் ஏற்றி வழிபட, அமெரிக்க வாழ் இந்தியர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும், அமெரிக்க கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கேபிடல் ஹில் பகுதியில், ராமர் கோவில் டிஜிட்டல் போர்டுகளை சுமந்து வாகனம் சுற்றி வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



நியூயார்க்கில் சிறப்பு வழிபாடுகள் நடக்க உள்ளன. புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில், அயோத்தி ராமர் கோவில், ராமரின் படங்கள் '3டி'யில் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து (9)
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
05-ஆக்-2020 19:25 Report Abuse
Natarajan Ramanathan ..இன்று பூஜையில் கலந்து கொண்ட 94 பேர்களில் சுமார் முப்பது பேர் பிராமின்ஸ். நான்கு இஸ்லாமியர்கள். பத்துப்பேர் அமெரிக்கர்கள். சுமார் 50 பேர் எந்த ஜாதி என்று தெரியாத இந்தியர்கள். சர்ப்பிரைசாக கலந்து கொண்ட நான்கு இஸ்லாமியரில் ஒருவர் பாகிஸ்தானியர்.
Vetri - Chennai,இந்தியா
05-ஆக்-2020 09:09 Report Abuse
Vetri காரோண எணிக்கையா அதிகரிக்காம உட மாட்டாங்க போல.
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
05-ஆக்-2020 08:41 Report Abuse
Balasubramanian Ramanathan அமெரிக்காவில் உள்ள தன் உறவுகளை நிகழ்ச்சிகளில் பங்கேற்கமாறு வீரமணி அறிவுறுத்தியிருக்காராமே.
kannan - Chennai,இந்தியா
05-ஆக்-2020 07:14 Report Abuse
kannan இஸ்லாமியர்கள் சரி .. பிற ஜாதியினரும் உள்ளனரா திரு .நடராஜன் ராமநாதன் அவர்களே ....
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
05-ஆக்-2020 06:45 Report Abuse
Natarajan Ramanathan இன்று பாஸ்டனில் எனது சகோதரர் மிகப் பெரும் பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளார். சுமார் நூறு இந்தியர்கள் (அதில் சில இஸ்லாமியர்களும்) கலந்துகொள்கிறார். நேற்றே ஸ்பெயின் கனடா ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கொண்டாடினர்.
Raman - kottambatti,இந்தியா
05-ஆக்-2020 06:43 Report Abuse
Raman ஏன்... இங்கே நிரந்தரமா வந்து கோயில் காட்டலாமே?
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
05-ஆக்-2020 04:34 Report Abuse
J.V. Iyer ராம்..ராம். ஜெய்ராம்
chakra - plano,யூ.எஸ்.ஏ
05-ஆக்-2020 01:46 Report Abuse
chakra எனக்கே இது புது தகவலா இருக்கு . போய் அயோத்தியில் கொண்டாட வேண்டியதுதானே
05-ஆக்-2020 06:17Report Abuse
இவன் chakra plano, நீங்க கிளம்புங்க...
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)