Advertisement

சென்னையில் குறையுது கொரோனா: தினசரி பாதிப்பு 2,000த்துக்கு கீழ் வந்தது

  • எழுத்தின் அளவு:

சென்னை; தமிழகத்தில், நேற்று ஒரே நாளில், 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 1.11 லட்சத்தை தாண்டியது.



இதுகுறித்து, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழகத்தில், 95 ஆய்வகங்களில் நேற்று, 34 ஆயிரத்து, 831 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில், 4,150 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.



சென்னையில், 1,713; செங்கல்பட்டில், 274; காஞ்சிபுரத்தில், 152; மதுரையில், 308; திருவள்ளூரில், 209; திருவண்ணாமலையில், 136 ; வேலுாரில், 179 ; விழுப்புரத்தில், 109; விருதுநகரில், 113 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மார்ச் முதல் நேற்று வரை, 13.41 லட்சம் பேருக்கு நடத்திய பரிசோதனையில், ஒரு லட்சத்து, 11 ஆயிரத்து, 151 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில், 68 ஆயிரத்து, 254 பேர்; செங்கல்பட்டில், 6,633; மதுரையில், 4,085; திருவள்ளூரில், 4,806 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில், 1,000 பேர் உட்பட, மாநிலம் முழுதும், 2,186 பேர் நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதுவரை, 62 ஆயிரத்து, 778 பேர் குணமடைந்து உள்ளனர்; 46 ஆயிரத்து, 860 சிகிச்சையில் உள்ளனர்.சில தினங்களில் இறந்தவர்களில், சென்னையில், 21 பேர்; திருவள்ளூரில், 10 பேர்; செங்கல்பட்டில், எட்டு பேர்; மதுரையில், 5 பேர் என, மாநிலம் முழுதும், 60 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



கொரோனா பாதிப்பால், சென்னையில், 1,054 பேர் உட்பட, தமிழகம் முழுவதும், 1,510 பேர் இறந்துள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.சென்னையில், தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, 2,000த்துக்கும் மேல் இருந்து வந்த நிலையில், நேற்று, 1,713 ஆக குறைந்து உள்ளதால், படிப்படியாக தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்து விடும் என, சுகாதார துறையினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.



nsmimg788544nsmimg



மாவட்டங்களில் பாதிப்பு நிலவரம்




மாவட்டம் - பாதிப்பு - குணம் அடைந்தோர் - இறப்பு


அரியலுார் -468 -447- 0


செங்கல்பட்டு- 6,633 -3,445- 119


சென்னை- 68,254 -42,309- 1,054


கோவை- 741 -275- 1


கடலுார் -1,257- 887- 5


தர்மபுரி -121- 52 -0


திண்டுக்கல்- 704- 324- 7


ஈரோடு -248 -81 -5


கள்ளக்குறிச்சி- 1,205- 515- 4



காஞ்சிபுரம் -2,547- 983- 33


கன்னியாகுமரி -560- 247- 3


கரூர் -166- 126 -3


கிருஷ்ணகிரி- 185 -73- 2


மதுரை- 4,085 -1,048- 62


நாகை -285- 114 -0


நாமக்கல்- 109 -90- 1


நீலகிரி- 124- 49 -0



பெரம்பலுார்- 168- 156- 0


புதுக்கோட்டை- 350- 108- 6


ராமநாதபுரம் -1,385- 424- 20


ராணிப்பேட்டை- 1,148 -537- 5


சேலம்- 1,247 -400- 5


சிவகங்கை- 512 -178- 7


தென்காசி- 448- 207- 1


தஞ்சாவூர்- 496- 310- 2



தேனி 1,009 -368 -7


திருப்பத்துார்- 259- 90 -0


திருவள்ளூர் 4,806- 3,062- 94


திருவண்ணாமலை -2,497- 1,140 -15


திருவாரூர் -539- 348- 0


துாத்துக்குடி -1,162 -847- 4


திருநெல்வேலி- 1,030 -671- 9


திருப்பூர்- 204 -125- 0


திருச்சி -972 -483 -4


வேலுார் -1,932 -579- 6


விழுப்புரம் -1,186 -604 -17


விருதுநகர் -895 -385 -8


வெளிநாட்டில் இருந்து வந்தோர்- 432 -235- 1'


உள்நாட்டு விமான பயணியர்- 366 -132- 0


ரயிலில் பயணியர் -416 -324- 0


மொத்தம் -1,11,151- 62,778 -1,510

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து (6)
kannan rajagopalan - Chennai,இந்தியா
06-ஜூலை-2020 18:01 Report Abuse
kannan rajagopalan நல்ல செயதி. இதே போல குறைந்து வர வேண்டிக்கொள்கிறேன் . வயிற்றெரிச்சல் எதிரி கட்சிகள் அறிக்கை விடாமல் இருக்க கடவுளை பிரார்த்திக்கிறேன் . எண்ணிக்கை அதிகரிப்பதை மிக்க மகிழ்ச்சியுடன் சொல்லும் தொலைக்காட்சி களுக்கு மனவருத்தம் இருக்கும் .
Bhaskaran - Chennai,இந்தியா
06-ஜூலை-2020 16:01 Report Abuse
Bhaskaran இறைவா இப்படியே தொற்றை குறைத்துவிடப்பா
S. Narayanan - Chennai,இந்தியா
06-ஜூலை-2020 14:21 Report Abuse
S. Narayanan உங்கள் நம்பிக்கைக்கு எங்கள் நல்வாழ்த்துக்கள். மலர வேண்டும் பழைய காலம்.
06-ஜூலை-2020 10:19 Report Abuse
நக்கல் நல்ல செய்தி, முரசோலி மற்றும் தீயமுக ஆதரவு ஊடகங்களில் வராது....
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)