Advertisement

பாலத்தில் ரிப்ளெக்டர் அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

  • எழுத்தின் அளவு:

கரூர்: கரூர்-வாங்கல் சாலையில் உள்ள குறுகிய பாலம், சில மாதங்களுக்கு முன் விரிவுபடுத்தப்பட்டது. இதை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில், பாலத்தின் ஓரத்தில் தடுப்பு தூண்களும் அமைக்கப்பட்டன. இதில், கறுப்பு மற்றும் மஞ்சள் பெயின்ட் அடித்து, சிவப்பு நிறத்தில் ரிப்ளெக்டர் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், இரவு நேரத்தில் கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்கிறவர்கள் தடுமாறுகின்றனர். இரு சக்கர வாகனங்களில் செல்வோர், கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே, தடுப்பு தடுப்பு தூண்களில், சிவப்பு நிறத்தில் ரிப்ளெக்டர் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)