Advertisement

காலி பெருங்காய டப்பா: பயன்பாடில்லாத இ-சேவை மைய கட்டடங்கள்

  • எழுத்தின் அளவு:


அன்னுார் : அன்னுார் வட்டாரத்தில், பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இ-சேவை மைய, கட்டடங்கள் பயன்படுத்தப்படாமல் முடங்கி கிடக்கின்றன.



மத்திய, மாநில அரசுகளின் நிதியில், தமிழகத்தில் அனைத்து ஊராட்சிகளிலும், இ-சேவை மைய கட்டடங்கள் கட்டப்பட்டன. அன்னுார் ஒன்றியத்தில், 2015ம் ஆண்டு துவங்கி, 2018ம் ஆண்டு வரை, கரியாம்பாளையம், கஞ்சப்பள்ளி, ஒட்டர்பாளையம், பொகலுார், வடவள்ளி, காரே கவுண்டன்பாளையம் உள்ளிட்ட 21 ஊராட்சிகளிலும், தலா, 17 லட்சம் ரூபாய் வீதம், மூன்று கோடியே 57 லட்சம் ரூபாயில், 21 சேவை மையங்கள் கட்டப்பட்டன. இவை கட்டப்பட்டு, மூன்று ஆண்டுகள் ஆகியும், இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. பல கோடி ரூபாய் அரசு திட்ட நிதி முடங்கி கிடக்கிறது.



கட்டடங்கள் அனைத்தும், புத்தம் புதிதாக, ஆனால் வெறும் காலிப் பெருங்காய டப்பாக்கள் போல காட்சியளிக்கின்றன. இதுகுறித்து அன்னுார் மக்கள் கூறியதாவது :அரசின் பல துறைகள், 'ஆன் லைன்' மயமாகி வருகின்றன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், மின் கட்டணம் செலுத்துதல், பல்வேறு சான்றுகள் பெறுதல் என, பெரும்பாலான சேவைகள், 'ஆன் லைன்' முறைக்கு மாற்றப்பட்டுள்ளன.இந்த சேவைகள், எளிதில் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில், அனைத்து ஊராட்சிகளிலும், சேவை மையத்திற்கு கட்டடங்கள் கட்டப்பட்டன.



ஆனால், அதற்கு தேவையான கம்ப்யூட்டர், பிரிண்டர், இணைய தள இணைப்பு, உள்கட்டமைப்பு வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. கம்ப்யூட்டர் ஆபரேட்டரும் நியமிக்கப்படவில்லை. இதனால், மக்கள் அதிக தொலைவில் உள்ள, இ-சேவை மையங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. அங்கும் இணைய தள இணைப்பு மிக மெதுவாக உள்ளதால், சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்தால், அதிக நாட்கள் காத்திருக்க வேண்டி உள்ளது.பல கோடி ரூபாய்கள் செலவழித்து, சேவை மையங்கள் கட்டியும், பயனில்லாமல் உள்ளது.



அரசு விரைவில், சேவை மையத்தில் கம்ப்யூட்டர், பிரிண்டர் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி, முடங்கிய சேவை மையங்கள் செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அன்னுார் மக்கள் தெரிவித்தனர்.'ஆக்டிவ்'வா இல்ல சார்!அன்னுார் ஒன்றிய பொறியாளர் செந்தில்குமார் கூறுகையில்,''சேவை மைய கட்டடங்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் கூட்டமைப்பிடம், அந்தந்த ஊராட்சிகளில் ஒப்படைக்கப்பட்டு விட்டது. அதில் பல குழுக்கள், அந்த கட்டடங்களை பயன்படுத்தி வருகின்றன. சில குழுக்கள், 'ஆக்டிவ்'வாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், கட்டடத்தை, சுய உதவி குழுக்கள் ஆங்காங்கு பயன்படுத்தி வருகின்றன,'' என்றார்.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)