Advertisement

ஹேப்பி பர்த்டே! திருப்பூர் மாவட்டத்துக்கு இன்று வயது 12

  • எழுத்தின் அளவு:



திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டு, 11 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று, 12ம் ஆண்டு துவங்குகிறது.


கோவை, ஈரோடு மாவட்டங்களில் இருந்து திருப்பூர் மாவட்டத்தை உருவாக்கும் அரசாணை, 2008 அக்., 24ல் வெளியானது. ஈரோடு மாவட்டத்தில் இருந்த, காங்கயம், தாராபுரம் தாலுகாக்கள், கோவை மாவட்டத்தில் இருந்த திருப்பூர், அவிநாசி, பல்லடம், உடுமலை தாலுகாக்களை இணைத்து மாவட்டம் உருவாக்கப்பட்டது.


கடந்த, 2009 பிப்., 22ம் தேதி, புதிய மாவட்டம் உதயமானது. திருப்பூர், தாராபுரம் என, இரு

வருவாய் கோட்டங்கள் மட்டுமே இருந்த நிலையில், உடுமலை கோட்டமும், மடத்துக்குளம் தாலுகாவும் உருவாக்கப்பட்டது.முதலில், ஏழு தாலுகாக்கள், மூன்று வருவாய் கோட்டத்துடன் மாவட்டம் துவங்கியது. அப்போது, மாநகராட்சி, ஏழு நகராட்சிகள், 17 பேரூராட்சிகள், 272

ஊராட்சிகள் இருந்தன.


நிர்வாக வசதிக்காக, 2014ல், அவிநாசியில் இருந்து ஊத்துக்குளி தாலுகா, திருப்பூர் தாலுகா, வடக்கு மற்றும் தெற்கு என, இரண்டாக பிரிக்கப்பட்டன. தாலுகா எண்ணிக்கை, தற்போது,

ஒன்பதாக உயர்ந்துள்ளது. கடந்த, 2011 உள்ளாட்சி தேர்தலின் போது, மாநகராட்சி எல்லை

விரிவாக்கம் செய்யப்பட்டது.வேலம்பாளையம், நல்லுார் நகராட்சிகளும், எட்டு ஊராட்சிகளும், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. காங்கயம் பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.


தற்போது, ஒரு மாநகராட்சி, ஐந்து நகராட்சிகள், 16 பேரூராட்சிகள், 265 ஊராட்சிகள் உள்ளன.

திருப்பூர் மாவட்டம் துவங்கிய போது, 20 லட்சமாக இருந்த மக்கள் தொகை, தற்போது, 30

லட்சத்தை தாண்டியுள்ளது. மாவட்டம் இன்று, தனது 11வது வயதை கடந்து, 12வது வயதில் காலடி எடுத்து வைக்கிறது.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)