Advertisement

கோவை - திருப்பதி ரயிலில் ஏ.சி., பெட்டி இணைப்பு

  • எழுத்தின் அளவு:

திருப்பூர்: கோவை - திருப்பதி ரயிலில், நாளை முதல், ஒரு ஏ.சி., பெட்டி இணைக்கப்படுகிறது.


வாரந்தோறும், ஞாயிறு, செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய, நான்கு நாட்கள், கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, சித்துார் வழியாக திருப்பதிக்கு சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.ரயில், காலை 6:00 மணிக்கு, கோவையில் புறப்பட்டு, மதியம் 2:50க்கு திருப்பதி செல்லும். எட்டு முன்பதிவு, ஒரு படுக்கை வசதி, ஆறு பொது பெட்டிகள் உட்பட, 18 பெட்டிகள் இருந்தன.


இதுவரை, ஏ.சி., பெட்டி இல்லாமல் இருந்தது. நாளை (28ம் தேதி) முதல் மார்ச் 28 வரை ஒரு ஏ.சி, பெட்டி இணைக்கப்பட்டிருக்கும். ஏ.சி., பெட்டிக்கு வரவேற்பு இருந்தால், தொடர்ந்து இப்பெட்டி இணைக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று, ரயில்வே அதிகாரிகள் கூறினர்.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)