Advertisement

திமுக எம்எல்ஏ., கே.பி.பி.சாமி காலமானார்

  • எழுத்தின் அளவு:

சென்னை: மீன்வளத்துறை முன்னாள் அமைச்சரும், திருவொற்றியூர் சட்டசபை தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுமான, கே.பி.பி.சாமி, 57, உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது உடலுக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.


திருவொற்றியூர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., - கே.பி.பி.சாமி. ஒன்றரை ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மூன்று நாட்களுக்கு முன் வீடு திரும்பினார். நேற்று காலை, 6:10 மணிக்கு, திருவொற்றியூர் கே.வி.கே.குப்பத்தில் உள்ள, தன் இல்லத்தில் உயிரிழந்தார்.இவர், 2006 பொதுத்தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட்டு, முதல் முறையாக, எம்.எல்.ஏ.,வாக தேர்வானார். கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில், மீன்வளத்துறை அமைச்சராக இருந்தார். 2016 தேர்தலில், திருவொற்றியூர் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.,வானார். சாமியின் மனைவி உமாசாமி, மகன் இனியவன் இருவரும், ஏற்கனவே, மரணமடைந்து விட்டனர். மற்றொரு மகனான பரசு பிரபாகரனும், மகள் உதயாவும் உள்ளனர். இவர்களில், மகள் உதயா ஆஸ்திரேலியாவில் வசிப்பதால், அவர் வந்த பின், இன்று மாலை, 3:00 மணிக்கு, இறுதி சடங்குகள் நடைபெற உள்ளன.
nsmimg756145nsmimg

ஸ்டாலின் அஞ்சலி

கே.பி.பி.சாமி உடலுக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலர், கே.என்.நேரு, முன்னாள் அமைச்சர், எ.வ.வேலு, எம்.பி.,க்கள் கலாநிதி, தமிழச்சி தங்க பாண்டியன், மாவட்ட செயலர்கள் சுதர்சனம், சேகர்பாபு, நாசர் உட்பட ஏராளமான தி.மு.க., வினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.


அஞ்சலி செலுத்திய பின், ஸ்டாலின் கூறுகையில், ''கே.பி.பி.சாமியின் மறைவு, தி.மு.க.,விற்கும், மீனவ சமுதாயத்திற்கும் பேரிழப்பு. உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, நேரில் சென்று பார்த்தேன். இயக்க பாடலை பாடி, அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்,'' என்றார்.


பின், ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், 'தி.மு.க., வின் சுறுசுறுப்பு தொண்டராக செயல்பட்டவர் கே.பி.பி.சாமி. சட்டசபையில், அவர் ஆற்றிய பணிகளும், என்னுடன் இணைந்து பணியாற்றிய காலங்களும் மறக்க இயலாது' எனக் கூறியுள்ளார். கே.பி.பி.சாமியின் மறைவுக்கு, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தும் இரங்கல் தெரிவித்துள்ளார்.


தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை சரிவு

தமிழக சட்டசபையில், தி.மு.க.,- - எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை, 100ல் இருந்து, 99 ஆக குறைந்துள்ளது.தமிழக சட்டசபையில், அ.தி.மு.க.,விற்கு, சபாநாயகருடன் சேர்த்து, 125 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். எதிர்க்கட்சியான தி.மு.க.,விற்கு, 100 எம்.எல்.ஏ.,க்கள், அதன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஏழு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு, ஒரு எம்.எல்.ஏ., உள்ளனர். ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ., உள்ளார்.சென்னை, திருவொற்றியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., கே.பி.பி.சாமி, உடல் நலக்குறைவால், நேற்று காலை இறந்தார். இதன் காரணமாக, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை, 99 ஆக குறைந்துள்ளது.தற்போது, திருவொற்றியூர் எம்.எல்.ஏ., பதவி காலியாக உள்ளது. காலியான இடத்திற்கு, ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும். ஆனால், தமிழக சட்டசபை பொதுத்தேர்தல், அடுத்த ஆண்டு நடக்க உள்ளதால், திருவொற்றியூர் சட்டசபை தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பில்லை என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து (58)
Bhaskaran - Chennai,இந்தியா
28-பிப்-2020 04:42 Report Abuse
Bhaskaran Aayutha பூஜை அல்லது தீபாவளி செலவுக்கு ஒற்றியூர் காரர்களுக்கு பணம் கிடைத்துவிடும்
periasamy - Doha,கத்தார்
27-பிப்-2020 14:55 Report Abuse
periasamy RIP
27-பிப்-2020 13:51 Report Abuse
நக்கல் மொதல்ல திருவற்றியூர் பக்கம் ஒரு சின்ன வீடா பாரத்து ஏற்பாடு பண்ணணும்... தேர்தல் போது பணம் கொட்டும்...
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
27-பிப்-2020 15:11Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன்உங்கள் தலைவர் சின்ன வெற்றிக்கு என்ன ஆயிற்று தெரியும் இல்ல...
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
28-பிப்-2020 13:48Report Abuse
மூல பத்திரம் ஏன் இந்த போலி இமிடேஷன்...
Santhosh Gopal - Vellore,இந்தியா
27-பிப்-2020 13:15 Report Abuse
Santhosh Gopal சாமி இறந்த செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்ததாக சுடலை கூறினார். சுடலைக்கு வயிற்றில் புளியை கரைக்கும். இடைத்தேர்தல் வருகிறதே என்று. திமுக தலைவராக பிரசாந்த் கிஷோர் பொறுப்பேற்ற பிறகு வரும் முதல் சட்டமன்ற இடைத்தேர்தல். இந்த இடைத்தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றே ஆகவேண்டும், அப்போது தான் அடுத்து 2021 ல், இந்த இடைத்தேர்தல் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம், திமுக தான் வெற்றி பெரும் என்று ஊடகங்கள் முழங்க தொடங்குவார்கள். தோற்றுவிட்டால், பிரசாந்த் கிஷோர் இருந்தும் தோல்வி அடைந்தது, அதனால் பிரசாந்த் கிஷோர் மதிக்கமாட்டார்கள். ஜெயித்துவிட்டால், பிரசாந்த் கிஷோர் உதவியுடன் திமுக வெற்றி பெற்றது, வரும் 2021 தேர்தலிலும் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற வைப்பார் என்ற நம்பிக்கை கட்சி தொண்டர்களுக்கு வரும். உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வைத்து இடை போடமுடியாது. இந்த இடைத்தேர்தல் சற்று வித்தியாசமானது, இந்த இடைத்தேர்தல் முன்னோட்டம் என்றும் எடுத்துக் கொள்ளலாம். இன்னும் ஒரு வருடம் தான் இருக்கிறது, ஆளும் கட்சிக்கு வோட்டு போடலாம் என்று நினைத்து ஒட்டு போடமாட்டார்கள். இப்போது உள்ள நிலவரப்படி, அதிமுக தான் வெற்றி பெரும். இதை நினைத்து சுடலை தூக்கம் இந்நேரம் கெட்டிருக்கும். வண்ணாரப்பேட்டை பாய்களை தூண்டிவிட்டாகி விட்டது, அந்த நம்பிக்கையில் சுடலை நிம்மதி பெருமூச்சு விடலாம்.
Pannadai Pandian - wuxi,சீனா
27-பிப்-2020 13:40Report Abuse
Pannadai Pandianகண்டிப்பா திமுக மண்ணை கவ்வும்…..எடப்பாடி லேசுப்பட்ட ஆள் இல்ல…....
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
27-பிப்-2020 15:09Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன்ஆமாம் ஜெயாவை 75 நாள் ஆஸ்பத்திரியில் இருக்கும்போது செய்ததை மறக்க முடியுமா...
Santhosh Gopal - Vellore,இந்தியா
27-பிப்-2020 15:13Report Abuse
Santhosh Gopalசார், கரெக்ட், இடைத்தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால், அது வரும் பொது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும். என்ன தான் ஆளும் கட்சியாக இருந்தாலும், ஆட்சி முடியும் தருவாயில் வரும் இடைத்தேர்தல்களில் மக்கள் ஆளும் கட்சி என்கிற அந்தஸ்துடன் வாக்களிக்கமாட்டார்கள். ஏன் என்றால் பொது தேர்தல் மனநிலையில் தான் வாக்களிப்பார்கள். இந்த தேர்தலை முன்னோட்டமாக கூட எடுத்து கொள்ளலாம். அதுவும் சென்னையில்... திமுக கோட்டை, எடப்பாடி தன்னுடைய பலத்தை நிரூபிக்கும் தேர்தல். சுடலை தோற்றுவிட்டால், பிரசாந்த் கிஷோருக்கு மதிப்பு போய்விடும். ஆகையால் புலி வாலை பிடித்த கதையாக இருக்கப்போகிறது சுடலை கதி. இப்போவே வயிற்றில் புலி கரைக்க ஆரம்பித்திருக்கும்....
Srinivas - Chennai,இந்தியா
27-பிப்-2020 17:08Report Abuse
Srinivas//எடப்பாடி லேசுப்பட்ட ஆள் இல்ல// எப்படிப்பட்ட ஆள் என்று கட்சி அடிமைகளுக்கு, மக்களுக்கும் தெரியும்....
Ashanmugam - kuppamma,இந்தியா
27-பிப்-2020 13:11 Report Abuse
Ashanmugam கார், வீடு, பங்களா என சுகபோக வாழ்வு வாழ்ந்துவரும் வேளையில் விதி யாரை விட்டது. இன்னும் நீண்ட காலம் வாழ வேண்டிய முன்னாள் அமைச்சர் இறப்பு, அவங்க குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழைப்பு. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
N S Sankaran - Chennai,இந்தியா
27-பிப்-2020 12:56 Report Abuse
N S Sankaran பன்னாடை பாண்டியன் அவர்களின் கருத்தை ஆமோதிக்கிறேன். சரியான பேட்டை ரவுடி இந்த ஆள். சுருங்க சொன்னால் தி மு க வின் மாடல் பிரதிநிதி.
Pannadai Pandian - wuxi,சீனா
27-பிப்-2020 13:42Report Abuse
Pannadai Pandianநன்றி சாமியோ……. நன்றி….....
sambantham sasikumar - chennai,இந்தியா
27-பிப்-2020 15:36Report Abuse
sambantham sasikumarஅந்த பகுதி மக்கள் அவருக்கு நற்சான்றுதல் வழங்கவில்லை. இவரை எதிர்த்து போட்டியிட்டவர்கள் இவரைவிட மோசமானவர்கள் என நினைக்கிறன்....
27-பிப்-2020 12:45 Report Abuse
ஜப்பான்நாட்டு துணைமுதல்வர்   சொடலை தாலியறுப்பு கூட்டத்தில் கலந்துகொள்வது மட்டுமே அல்லாது அது போலவே நிகழ்த்தியும் காட்டிய சாமி
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
27-பிப்-2020 12:30 Report Abuse
வெற்றிக்கொடிகட்டு நீங்கள் ஜெயா வை சொல்லுகிறீர்கள் வினை விதைத்தவன் அறுத்தே ஆவான்
வல்வில் ஓரி - தயிர் வடை,தத்தி சுடலை ,இந்தியா
27-பிப்-2020 12:55Report Abuse
வல்வில் ஓரிஅதான் இதோ அறுத்திட்டானே...பெரிய வினைக்கு அறுவடை காலம் வந்துகிட்டேயேயிருக்கு......
elakkumanan - Naifaru,மாலத்தீவு
27-பிப்-2020 13:45Report Abuse
elakkumananஅறுபது கோடி வினைக்கே என்ன பலன் னு பாதீக்கல? ஆயிரம் லச்சம் கோடி .......................ஐயோ பாவம்.............இலவு காத்த கிளி அல்ல திருட்டு பூனை..................................ஊருக்கெல்லாம் வினையின் பயன் கிடைக்கும்போது, முன்னூறு கோடி கொடுத்தா, பயன் மாறிடுமா என்ன..? கடவுள் இருக்கான்..................வேட்டியை நல்ல கட்டுங்கோ ப்ரோ ...........................கொடியை அப்பொறம் கட்டலாம் ................ இப்பிடித்தான், டீம்கா அடுத்தவன் வேட்டி கிழிய வேலை பாக்க, தன குடும்பத்தை சொகுசாக வாழ வைக்கும் வரலாறு கொண்டது ................................ புரியனும் ...........வயிறு விடமாட்டேங்குது.............என்ன ப்ரோ....................
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
27-பிப்-2020 15:10Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன்உங்க ஜெயா அம்மாவுக்கு கடவுள் வெச்சார் ஆப்பு அப்போ...
Srinivas - Chennai,இந்தியா
27-பிப்-2020 17:11Report Abuse
Srinivas//உங்க ஜெயா அம்மாவுக்கு கடவுள் வெச்சார் ஆப்பு அப்போ...// ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி...சிறுதாவூர், கொடநாடு, கங்கைஅமரன் பங்களா போன்ற பல ஆயிரம் கோடிகள் சொத்துக்களை வாங்கி மக்களுக்கு சேவை செய்தவர்....
பச்சையப்பன், கோபால் புரம். இந்த தொகுதியில் தேர்தல் வந்தால் அடிமைகள் ஜெயிப்பார்களாம். ஹேஹேஜஹே!! இந்த முறை பிரச்சாரத்தில் எங்கள் குட்டி கலைஞர் மழலைத் தளபதி இன்பநிதிண்ணா கலந்து கொள்வார். அவரின் ஒரே கையசைப்பில் 243 தொகுதிகளிலும் எங்கள் தளபதி வெற்றி பெற்று முதல்வராக அமர்வார். வெற்றி நாம தே!!!
காவல்காரன்: சுடலைஅய்யா சாமி! 234 தொகுதி தான் ‌...
sivan - seyyur,இந்தியா
27-பிப்-2020 14:44Report Abuse
sivan தொகுதி எண்ணிக்கையை கூட மாற்றி சொல்லவில்லை என்றால் அப்பறம் என்ன திமுக உடன்பிறப்பு அவர்?? தலைவர் எவ்வழி தொண்டர் அவ்வழி என்பதால்தான் அவர் அப்படி சொல்லியுள்ளார்...
siriyaar - avinashi,இந்தியா
27-பிப்-2020 12:14 Report Abuse
siriyaar திருவெற்றியூர் மக்களுக்கு எப்படியோ அதிர்ஷடம் அடிக்கப்போகிறது இடைத்தேர்தல் வீட்டுக்கு ரூபாய் 25000 வரை தேறும்.
மேலும் 34 கருத்துக்கள்...
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)