Advertisement

பாத்திமா தற்கொலை வழக்கு: சி.பி.ஐ.,க்கு மாற்றம்

  • எழுத்தின் அளவு:

சென்னை: சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாத்திமா லத்தீப் 21. இவர் சென்னை ஐ.ஐ.டி. உயர் கல்வி நிறுவனத்தில் முதுநிலை பட்டப் படிப்பு படித்தார். அங்குள்ள விடுதி அறையில் பாத்திமா லத்தீப், கடந்த நவ., 9ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். பாத்திமாவின் தந்தையும், தனது மகள் மரணத்தில் நீதி கேட்டும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரியும் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கை, சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனக்கூறி தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

nsmimg738204nsmimg


இந்நிலையில், பாத்திமா தற்கொலை செய்த வழக்கு, சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து (27)
Sridhar Rengarajan - Trichy,இந்தியா
15-டிச-2019 19:07 Report Abuse
Sridhar Rengarajan மைனாரிட்டி வாக்குக்காக நடத்தப்படும் அக்கப்போர் இது. எதிர்க்கட்சிகள் ஒப்பாரியை அடக்க நடத்தப்படும் சிபிஐ விசாரணை. இது கொலை இல்லை, பாலியல் பலாத்காரம் நடந்ததாகவும் தெரியவில்லை. போதை பொருள் பிரச்சினை, பயங்கரவாத பின்னணி போன்று எதுவும் இருப்பதாக தெரியவில்லை. தற்கொலைக்கெல்லாம் சிபிஐ விசாரணையா. மாணவி அவர்களின் தாய் தந்தை துபாயிலிருந்தபோது என்று பழைய குப்பையெல்லாம் கிளரப்போகிறது சிபிஐ.
Endrum Indian - Kolkata,இந்தியா
15-டிச-2019 17:43 Report Abuse
Endrum Indian இவளை யாரேனும் கொலை செய்திருந்தால் நிச்சயம் சி பி ஐ சரி. இவள் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு கல்வி நிறுவனம் எப்படி பொறுப்பாகும்?? வெறும் மத + பணம் இதற்காக இவள் கேஸை சி பி ஐ விசாரிக்க சொல்வது கடைந்தெடுத்த முட்டாள் தனம். இந்த மாதிரி 4 பேர் சென்ற 2 மாதத்தில் தற்கொலை செய்து கொண்டார்களே அவர்களை பற்றி எந்த மீடியாவு ஏன் டப்பா தட்டவில்லை அவர்கள் இந்துக்கள் அவர்கள் ஆண் அவர்கள் அந்த அளவுக்கு பணபலம் இல்லாதவர்கள் அதற்குத்தானே???இதை விட மோசமாக அரசியல் நடத்த முடியாது.
Sridhar - Jakarta,இந்தோனேசியா
15-டிச-2019 16:17 Report Abuse
Sridhar பாரென்சிக் அறிக்கை ஏன் இன்னும் வெளியிடவில்லை? தற்கொலை செய்துகொண்டவள் எழுதிய கடிதம் உண்மையில் யார் எழுதியது என்பதை போலீசார் கண்டுபிடித்தார்களா இல்லையா?
konanki - Chennai,இந்தியா
15-டிச-2019 13:35 Report Abuse
konanki திராவிஷங்களின் அரசியல். இந்த ஐஐடி ப்ரோபஸர் குறிப்பிட்ட ஜாதி யை சேர்ந்த வர். அவர் இந்த மாணவியை (இவரும் ஒரு பணக்கார துபாயில் பள்ளி படிப்பை முடித்த மாணவி தான். தமிழ் நாட்டு கிராமப்புற பகுதிகளில் படித்த மாணவி அல்ல) சரி யாக நடத்தவில்லை என்று பொய் பிரச்சாரம் செய்து தீர்ப்பும் எழுதி விட்டார்கள். ஊடகங்கள் ஒத்து ஊதின. ஆனால் தங்கள் கட்சி வெற்றி பெறவும் தான் முதலமைச்சர் ஆகவும் இதே ஜாதி யை சேர்ந்தவரை கோடி ரூபாய் செலவில் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் போது வட நாட்டு வந்தேறி என ஏசியதெல்லாம் மறந்து விடும்
konanki - Chennai,இந்தியா
15-டிச-2019 13:18 Report Abuse
konanki தற்கொலை செய்து கொண்ட பெண் ஓரு பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்த வர். தந்தை துபாயில் வேலை செய்யும் பெரும் பணக்காரர்.இந்த பெண் படித்ததும் துபாயில் தான். இவரின் நெருங்கிய உறவினர் கேரளாவில் ஒரு நகரத்தின் மேயர். கட்சி செல்வாக்கு மத ரீதியான செல்வாக்கு அதிகம். அதனால் தான் தமிழ் நாடு முதலமைச்சர் பிரதமர் உள் துறை அமைச்சர் சந்திப்பு எல்லாம் சர்வ சாதாரணமாக நடந்தது. தமிழ் சானல்களும் இந்த கட்சி மத அழுத்தம் காரணமாக இந்த விஷயத்தில் ஐ ஐ டி , அதன் ப்ரோபஸர்களை குற்றவாளி யாக பிரசாரம் செய்தது. ஐஐடி ப்ரோபஸர்கள் ஜாதியின் காரணமாக அவர்கள் மேல் குற்றசாட்டை எளிதாக தமிழக அரசியல் கட்சிகள் ,இடதுசாரி ,மிஷினரி, தனியார் பல்கலைக்கழகங்கள் சிறப்பாக செய்தன. இதில் சாதாரண மக்கள் கவனிக்க வேண்டிய விஷயம். 1. இந்த பெண் ப்ரோபஸருக்கு டெஸ்ட் பேப்பர் மறு டோடோல் செய்ய அனுப்பிய மெயிலுக்கு அவர் உடனடியாக ரி டோடலிங் செய்ய ஒப்புக்கொண்டு பதில் மெயில் அனுப்பி வைத்தார். 2 தொடர்ந்து மூன்று எஸ் ஆர் ம் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட போது எந்த சேனல்கள் அரசியல் கட்சிகள் இடதுசாரி அமைப்புகள் ஏன் பொங்க வில்லை? 3. அந்த ப்ரோபஸர்கள் ஜாதி காரணமா? 4. இரண்டு நாட்கள் முன்பு கோவில் பட்டியை சேர்ந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டது எந்த சேனலிலும் வரவில்லை ஏன்? இளம் வயதில் தற்கொலை செய்து கொள்வது என்பது சமுகத்தின் நஷ்டம் அவலம். இதை தடுக்க வேண்டிய து நம் பொறுப்பு. ஆனால் இதிலும் பணம் மொழி மத ஜாதி அரசியல் தான் நடக்கிறது என்பதை நாம் அறிவோம் . இந்த சூழல் இந்த விஷயத்தில் தீர்வு காண பாதகமான விளைவுகளை தான் ஏற்படுத்தும்.
Endrum Indian - Kolkata,இந்தியா
15-டிச-2019 17:48Report Abuse
Endrum Indianகேஸ் அந்த மாதிரியா?? அப்போ இவள் தனக்கு சாதகமாக ஏதேனும் நடக்கவில்லையென்றால் இந்த மாதிரி மன நிலை உள்ளவர்கள் கொலை செய்வார்கள் முடியாது, என்றால் தற்கொலை செய்து கொள்வார்கள் இது உளவியல் ரீதியான பணம் தகுதிக்கு மீறி கிடைக்கும் போது எழும் அகம்பாவ சூழ்நிலை. இதே மேற்சொன்ன விதம் தான் செய்ய தூண்டும்....
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
16-டிச-2019 02:10Report Abuse
கதிரழகன், SSLCஇந்த பொண்ணு தேர்வு எழுதி உள்ள வரலியாம். என்னமோ வெளிநாடு என் ஆர் ஐ இட ஒதுக்கீடு மூலியமா வந்தவுங்களாம். இப்படி தேர்வு இல்லாம வர்ற மாணவர்கள் எல்லாரும் ரொம்ப சிரம பாடுவாங்களாம்....
Divahar - tirunelveli,இந்தியா
15-டிச-2019 12:09 Report Abuse
Divahar கதை முடிந்துவிடும்
Krishna - bangalore,இந்தியா
15-டிச-2019 11:31 Report Abuse
Krishna Why No Arrests
Swaminathan Nath - kumbakonam,இந்தியா
15-டிச-2019 11:53Report Abuse
Swaminathan Nath, ஆசிரியர் படிக்கச் சொல்லுவது குற்றமா???? ப்ரெசெனை இருந்தால் போலீசில் சொல்லி இருக்கலாம், ,...
Swaminathan Nath - kumbakonam,இந்தியா
15-டிச-2019 11:55Report Abuse
Swaminathan Nathதற்கொலை தவறான முடிவு, யார் மேலாவது குற்றம் இருந்தால் அந்த பெண் போலீசில் சொல்லி இருக்கலாம், எல்லா ஆசிரியர்களு ம் நன்கு படிக்க வேண்டும் என சொல்லுவார்கள், இது தவறா????...
Indian Dubai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15-டிச-2019 11:14 Report Abuse
Indian Dubai This is one of the cheap politics by DMK & Communist. There are so many issues every day. Tamilnadu police is more than sufficient. This is not a critical case. Normal suicide case
15-டிச-2019 10:50 Report Abuse
naserali51034@gmail.com இதுலே யும் .......
Ram - ottawa,கனடா
15-டிச-2019 10:49 Report Abuse
Ram இந்துக்களை ஒதுக்கவேண்டும் என்று இந்த மைனாரிட்டிகள் செய்யும் அரசியல், மண்டை சரியில்லாமல் தூக்கு மாட்டிக்கொண்டால் யாரு என்ன செய்ய முடியும். இரண்டு நாட்கள் முன்பு கூட ஒரு தனியார் கல்லூரியில் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டார் அதற்க்கு ஏன் சிபிஐ விசாரணை கேட்கவில்லை . இந்த விவகாரத்தில் சிபிஐ இல்லை எப் பி ஐ வந்தாலும் ஒன்னும் ஆகப்போறதில்லை
மேலும் 13 கருத்துக்கள்...
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)