Advertisement

அமராவதி அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்

  • எழுத்தின் அளவு:

உடுமலை:மழை காரணமாக, அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.உடுமலை அமராவதி அணையிலிருந்து, பழைய, புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு, பாசன காலம் நீடிக்கப்பட்டு, கடந்த, 12ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டது.அமராவதி ஆற்றிலும், பிரதானக்கால்வாயிலும், இரு நாட்கள் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், நேற்று, பாசன பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், விவசாயிகள் கோரிக்கை அடிப்படையில், தண்ணீர் திறப்பு நிறுத்தப் பட்டது.நேற்று காலை நிலவரப்படி, அணை நீர்மட்டம், மொத்தமுள்ள, 90 அடியில், 73.66 அடியாகவும், நீர்இருப்பு, 2,670.52 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு, 326 கன அடியாகவும் இருந்தது.அதிகாரிகள் கூறுகையில்,' மழை குறைந்ததால், நிலைப்பயிர்களுக்கு நீர் தேவை என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில், இரு நாட்களாக தண்ணீர் வழங்கப்பட்டது. நேற்று மழை பெய்ததால், தண்ணீர் வேண்டாம் என விவசாயிகள் தெரிவித்ததால், நேற்று காலை தண்ணீர் திறப்பு முழுவதுமாக நிறுத்தப்பட்டது,' என்றனர்.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)