Advertisement

மஹா.,வில் அடுத்த திருப்பம்; கைகோர்க்கும் சிவசேனா - காங்., - என்.சி.பி.,

  • எழுத்தின் அளவு:

மும்பை: காங்., மற்றும் தேசியவாத காங்., கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுவதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டாலும், இந்த பேச்சுவார்த்தையால் புதிய கூட்டணி உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.மஹாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் முடிவு வெளியாகி சில நாட்களாக நீடித்து வந்த அரசியல் நாடகம் இன்று (நவ.,12) முடிவுக்கு வந்தது. பெரும்பாண்மையை நிரூபிக்க பாஜ., சிவசேனா, தேசியவாத காங்., (என்.சி.பி.,) கட்சிகளுக்கு கவர்னர் அழைப்பு விடுத்தும், எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைக்க முன்வரவில்லை. இதனால், 6 மாதத்திற்கு ஜனாதிபதி ஆட்சி அமலானது. இருந்தும் ஏதேனும் கட்சி பெரும்பான்மை நிரூபத்தால் விலக்கி கொள்ளப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


nsmimg730020nsmimg


இந்நிலையில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது: ஆட்சி அமைக்க பாஜ., மறுத்த அடுத்தநாள், கவர்னர், எங்களுக்கு அழைப்பு விடுத்து, 24 மணி நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கூறினார். ஆனால், காங்., என்.சி.பி., கட்சிகளிடம் பேசுவதற்கு கவர்னரிடம் 48 மணிநேரம் அவகாசம் கேட்டும், அவர் தரவில்லை. நாங்களும், பா.ஜ.,வும் பல ஆண்டுகளாக ஒன்றாக இருந்தாலும், தற்போது காங்., - என்.சி.பி., உடன் தொடர்ந்து பேசி வருகிறோம். இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.


nsmimg730021nsmimg


இதை தொடர்ந்து பாஜ., மூத்த தலைவர், நாராயன் ரானே செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், பாஜ., ஆட்சி அமைய தேவேந்திர பட்னவிஸ் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். நாங்கள் ஆட்சி அமைக்க முயற்சிப்போம். காங்., என்.சி.பி., உடன் இணைந்து சிவசேனா ஆட்சி செய்யும் என நினைக்கவில்லை. காங்., மற்றும் என்.சி.பி., கட்சிகள் சிவசேனாவை முட்டாளாக்குவதாக நினைக்கிறேன், என்றார்.முன்னதாக தேசியவாத காங்., கட்சியின் சரத் பவாரும், காங்., கட்சியின் அகமது படேலும் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர்.


nsmimg730022nsmimg


அப்போது காங்., கட்சியின் அகமது படேல் கூறுகையில், 'மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்பட்ட விதத்தில் திருப்தி இல்லை. கடந்த 5 ஆண்டுகளில் பல சந்தர்ப்பங்களில், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தும் விதத்தை, இந்த அரசு மீறி உள்ளது. நாங்கள் சிவசேனாவுடனும் கலந்தாலோசிக்க உள்ளோம். பா.ஜ., சிவசேனா மற்றும் தேசியவாத காங்., கட்சிகளுக்கு ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். ஆனால் காங்., கட்சிக்கு அழைப்பு விடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.சரத் பவார் பேசுகையில், சிவசேனாவுடன் கூட்டணி அமைப்பது குறித்து எங்களுக்கு அவசரம் இல்லை. காங்., கட்சியுடன் ஆலோசித்தபின், நாங்கள் ஒரு முடிவுக்கு வருவோம், என்றார்.தேசியவாத காங் கட்சியின் பிரபுல் படேல் கூறுகையில், ' நவ., 11ம் தேதி சிவசேனா முதலில் எங்களை முறையாக தொடர்பு கொண்டது. நாங்கள் அனைத்து பிரச்னைகள் குறித்தும் விவாதித்து பின்னர் முடிவெடுப்போம்' என்றார்.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து (33)
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
15-நவ-2019 04:33 Report Abuse
skv srinivasankrishnaveni பதவி வெறி இருக்கும் வரை தாக்கிரெஸ் கு விமோசனம் இல்லே கான் கிரேஸ் லே கூட்ட அவ்ளோ தான் சிவசேனா காணாமலே போயிரும் டோன்ட் WORRY
SUNDAR - chennai,இந்தியா
13-நவ-2019 08:55 Report Abuse
SUNDAR எல்லாவற்றையும் மறந்து சிவசேனா பிஜேபி உடன் செல்வதுதான் அக்கட்சின் கொள்கைக்கு உகந்தது. பிஜேபி ம் எல்லாவற்றையும் மறந்து பிஜேபி உடன் இணக்கமாக விட்டிட்டு கொடுத்து செல்வதுதான் சாலச் சிறந்தது., காங்கிரஸ் ஐ நம்பி சிவசேனா சென்றால் சிவசேனாவின் எதிர்காலம் பாழ்.
அருண் பிரகாஷ்,சென்னை சோனியா ஆதரவு தர தயார்..ஆனால் ஒரே ஒரு நிபந்தனை..தாக்கரே குடும்பம் மதமாற்றம் செய்து கொள்ள வேண்டும்..அதற்கும் தயார் ஆனால் எந்த மதம் என்பதில் குழப்பம் நீடிக்கிறது..
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
13-நவ-2019 06:58 Report Abuse
வல்வில் ஓரி சிவசேனாவுக்கும் தொட்டு தாலி கட்டிய பிஜேபிக்கும் சண்டை .. இதுக்கு நடுவுல ஒரே அரேபியனுங்களா வர்றான்னுவோலே ..ஏன்?
13-நவ-2019 08:08Report Abuse
pannadai pandianfor them it is one day nikkah....
Nathan - Hyderabad,இந்தியா
13-நவ-2019 06:44 Report Abuse
Nathan படேல் பவ்வார் போட்டோ அடடா , சாகும் மானை தின்ன காத்திருக்கும் கழுகுகள் போல, என்ன உடலுடன் பிறந்த கவனம், என்ன பாவனை
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
13-நவ-2019 06:35 Report Abuse
வல்வில் ஓரி சிவசேனையின் அடையாளமாகிய வீரத்திலகத்தை அழித்து மூளி நெற்றியுடன் ஒரு வெளிநாட்டு பிரஜை முன் குனிஞ்சிடீங்களேடா.. சிவாஜி இருந்தா ரெண்டு தாக்கரேவையும் கோணியில் கட்டி ப்ரதாப்காட்டுக்கு கொண்டு போயிருப்பார்..
Sathya Dhara - chennai,இந்தியா
13-நவ-2019 07:38Report Abuse
Sathya Dhara திரு வாழ்வில் ஓரி அவர்களே......மிக சரியான உவமையை எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள். இந்த துரோகி பதவிக்காக இத்தாலி அடிமை காலில் விழுவது கட்சிக்கே அவமானம்.....அவருக்கு வாக்கு அளித்தவர்களுக்கு அவமானம். ஒட்டு மொத்த ஹிந்துக்களுக்கு அவமானம். இவனது கொட்டத்தை அடக்க வேறு வழியே இல்லையா.......
13-நவ-2019 08:11Report Abuse
pannadai pandiansooniyakari soniyavin kaladiyil thakkarey. maratiya singathukku sothanai......
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
13-நவ-2019 06:30 Report Abuse
 N.Purushothaman என்னத்த மாற்றம் நடக்குது ? நேத்து கூட பா .ஜ உடனான பேச்சுவார்த்தைக்கான கதவுகள் தொறந்து தான் இருக்குன்னு உத்தவ் சொல்லி இருக்காரு ....அது கூட பத்திரிக்கையில் வந்து இருக்கு ....
Maatram makkalidathil irundhu varavendum - chennai,இந்தியா
13-நவ-2019 06:30 Report Abuse
Maatram makkalidathil irundhu varavendum Ncp kitta pesaamaiye SS summa adichu vittu irukkan. Engalukku 170 mla support irukku aatchi amaika ready a irukkum. BJP naala aatchi amaika mudiyalanu sonna naan poi amaipomnu evalo poi sollirukaan. Ncp kaatchum time kodukalaam aana SS ku time kodukavey koodadhu. 56 mla vechirukka SSvey rra varusham CM seat keatta (BJP kitta irundhappo). Ippo 54 seat vechirukka Ncp ethana varusham CM seat kekkum 44 seat vechirukka Congress ethana varusham CM seat kekkum ? Aana onnu evanungaley thaan BJP ya valathuviduraanga
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
13-நவ-2019 03:55 Report Abuse
J.V. Iyer மிகவும் கீழ்த்தரமான அரசியலுக்கு இவர்கள் தயார்.
Pannadai Pandian - wuxi,சீனா
13-நவ-2019 05:51Report Abuse
Pannadai Pandianin politics it is common survival of the fittest.......
meenakshisundaram - bangalore,இந்தியா
13-நவ-2019 03:19 Report Abuse
meenakshisundaram தேர்தலை எதிர்கொண்ட கூட்டணிகளில் எதிரெதிர் பக்கங்களில் இருந்துவிட்டு நாற்காலியில் அமரமட்டுமே முடிவுக்குப்பின்னர் சேர்வது சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்ற சட்டம் தேர்தல் கமிஷன் கொண்டு வரட்டும்.சேஷன் போன்றோர் முன்னோடியாக கருதி தற்போதுள்ள தேர்தல் கமிஷன் தலைவர் இந்த நடை முறையை கொண்டு வந்தால் கூட்டணி மாறும் கேவல அரசியலை நாம் ஒதுக்க முடியும் .ஜனநாயகத்தை வலுப்படுத்த இது உதவும் ,
மேலும் 19 கருத்துக்கள்...
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)