Advertisement

நிம்மதி பெருமூச்சு விடும் சென்னை மக்கள்; குறைந்தது காற்றுமாசு

  • எழுத்தின் அளவு:

சென்னை: கடந்த சில நாட்களாக சென்னையில் காற்று மாசின் பாதிப்பு அதிகம் காணப்பட்ட நிலையில், இன்று(நவ.,12) இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.



சென்னையில் தொடர்ந்து, எட்டு நாட்கள் காற்று மாசு அபாய கட்டத்தில் காணப்பட்டது. காற்றில், 1 கன சதுர மீட்டரில், நுண்துகள்கள் அளவு, 100க்குள் இருந்தால், மனிதர்களால் சுவாசிக்க முடியும். நுண்துகள்கள் அளவு அதிகரித்தால், நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய், சுவாசக் கோளாறு, குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி குறைபாடு உள்ளிட்டவை ஏற்படும். சென்னையில், எட்டு நாட்களாக காற்றில் நுண்துகள்களின் அளவு, 200க்கு மேல் இருந்தது. பல்வேறு பகுதிகளில், 300ஐ தாண்டியும் காணப்பட்டது.


nsmimg730015nsmimg


இந்நிலையில், நேற்றும் இன்றும் மாசு வெகுவாக குறைந்து, இயல்பு நிலையில் காணப்பட்டது. நேற்று முன்தினம், 234 ஆக இருந்த காற்று மாசு நேற்று, 184 ஆக குறைந்திருந்தது. இன்று அது மேலும் குறைந்து 50 ஆனது (மாலை 6 மணி நிலவரப்படி). காலை, மாலை வேளைகளில் பனி போல் காற்று மாசு படர்ந்து இருந்ததால், சென்னை மக்கள் அவதிக்குள்ளான நிலையில், தற்போது இயல்பு நிலைக்கு சென்னை திரும்பியுள்ளது மக்களை நிம்மதி பெருமூச்சு விடச் செய்துள்ளது.

nsmimg730016nsmimg

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து (6)
Nathan - Manama,பஹ்ரைன்
13-நவ-2019 07:45 Report Abuse
Nathan கார்கள் எண்ணிக்கை குறைய வேண்டும்
venkatan - Puducherry,இந்தியா
13-நவ-2019 06:21 Report Abuse
venkatan வாரம் ஒரு நாள் சனிக்கிழமைகளில் பேருந்து மற்றும் இரு சக்கர வாஹனங்கள்மட்டுமே மக்கள் பயன் படுத்த வேண்டும்.ஆட்டோ, கார்கள் லாரிகளை பயன்படுத்த தடை,சைக்கிள்,சைக்கிள் ரிக் ஷாக் களை ஊக்கப்படுத்தலாம்.
meenakshisundaram - bangalore,இந்தியா
13-நவ-2019 03:43 Report Abuse
meenakshisundaram இந்த 'மாசு 'சென்னையில் மாத்திரமல்ல ,தமிழகமெங்கும் பரவியுள்ளது ,மக்களின் மனதை 'மாசு 'படுத்தி ullaarkal ,அதை அளக்கவோ சரி செய்யவோ கருவி இல்லை .கூடங்குளத்தில் ஆரம்பித்து கலாச்சாரம் வரை அளிக்கும் முயற்சிகள் தொடர்கின்றன .
12-நவ-2019 21:08 Report Abuse
நக்கல் 1985ல் பட்டாசு வெடித்ததுதான் இதற்கு காரணம்... தீபாவளியை தடை செய்யவேண்டும்.... இப்படிக்கு அந்நிய கைக்கூலி இந்து விரோத கட்சிகள்...
Sri,India - India,இந்தியா
12-நவ-2019 20:18 Report Abuse
 Sri,India நூறு கார்களுடன் சுற்றி வரும் நமது அரசியல்வாதிகளை ஒரு மாதத்திற்கு தமிழகத்தை விட்டு அனுப்பினால் சென்னையில் காற்று மாசு பெருமளவு குறையுமே??
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
12-நவ-2019 20:05 Report Abuse
ஆரூர் ரங் வாகனப்பெருக்கம் ஆண்டுமுழுவதும் காற்றுமாசில் கொண்டுபோய் விடும் நாள் விரைவில் வரும்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)