Advertisement

பயங்கரவாதிகள் ஊடுருவல் தகவல்: வேலூர் மாவட்டத்தில் 262 பேர் கைது

  • எழுத்தின் அளவு:

வேலூர்: தமிழகத்தில், பயங்கரவாதிகள் ஊடுருவலையடுத்து, வேலூர் மாவட்டத்தில், போலீசார் நடத்திய சோதனையில் சந்தேகத்தின்படி, 262 பேரை கைது செய்துள்ளனர். கோவையில், பயங்காரவாதிகள் ஆறு பேர் ஊடுருவி உள்ளதாக, உளவுத்துறை தகவல் வந்துள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில், தமிழக - ஆந்திரா மாநில எல்லையில், 24 மணி நேரம் வாகன சோதனை நடந்து வருகிறது. இந்நிலையில், 'சாமிங் ஆபரேஷன்' என்ற பெயரில், வேலூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணி முதல், நேற்று காலை, 8:00 வரை, 435 லாட்ஜ்கள், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில், சந்தேகத்தின் அடிப்படையில், 262 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)