Advertisement

பள்ளி மாணவர்கள் 2 பேர் ஏரியில் குளித்தபோது மூழ்கி பலி

  • எழுத்தின் அளவு:

பெத்தநாயக்கன்பாளையம்: வைத்தியகவுண்டனூர் ஏரியில் குளித்த போது, பள்ளி மாணவர்கள் இருவர் மூழ்கி உயிரிழந்தனர்.


சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் அருகே, பெரியகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் அங்கமுத்து, 55. இவரது மனைவி சாந்தி, 42. பா.ம.க., பிரமுகரான இவர், ஊராட்சி முன்னாள் தலைவர். இவர்களது மகன் சரண்குமார், 13, அங்குள்ள, தனியார் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வந்தான். அதே பகுதியைச் சேர்ந்த, ரிக் தொழிலாளி வெங்கடாஜலம் - லதா தம்பதியின் மகன் தரணேஷ், 11, வைத்தியகவுண்டன்புதூரிலுள்ள தனியார் பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்துவந்தான். மாணவர்கள் இருவரும், நேற்று காலை, 9:30 மணிக்கு, வைத்தியகவுண்டனூர் ஏரிக்கு குளிக்கச்சென்றனர். சில நாளாக பெய்த மழையால், ஏரியில், தண்ணீர் அதிகளவில் தேங்கியிருந்தது. இதையறியாமல், நீச்சல் தெரியாத மாணவர்கள், ஏரியில் இறங்கிய நிலையில், மூழ்கி உயிரிழந்தனர். அங்கு, மாணவர்கள் வந்த சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்ததால், சந்தேகமடைந்த மக்கள் பார்த்தபோது, அவர்கள் இறந்து கிடந்தனர். உடனே, மக்கள் உடல்களை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர்கள் ஏற்கனவே இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஏத்தாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர். ஒரே ஊரைச்சேர்ந்த இரு மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தால், அப்பகுதி மக்கள் சோகமடைந்தனர். மேலும், சம்பவ இடத்தில், பெத்தநாயக்கன்பாளையம் தாசில்தார் அன்புக்கரசி ஆய்வு மேற்கொண்டார்.


Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)