சேலம் கோட்டம்
சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி
போட்டோ

ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பால், நான்காவது நாளாக நேற்றும்(ஜூலை 29), குளிக்க தடை தொடர்ந்த நிலையில், மெயினருவிக்கு செல்லும் நடைபாதை பூட்டப்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்.30-ஜூலை-2023

ஆடி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமி, முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.30-ஜூலை-2023

சேலம் மாவட்டம் இடைப்பாடி ஒன்றியத்தில் இருந்து ஏராளமானோர், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.30-ஜூலை-2023

கிருஷ்ணகிரியில் பட்டாசு குடோன் தீப்பற்றி வெடித்ததில், தரைமட்டமான கட்டட இடிபாடுகள், பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன.30-ஜூலை-2023

கிருஷ்ணகிரியில் பட்டாசு குடோன் தீப்பற்றி வெடித்ததில், தரைமட்டமான கட்டட இடிபாடுகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்தது.30-ஜூலை-2023

கிருஷ்ணகிரியில் ஹோட்டலில் வெடித்த சிலிண்டரால், பட்டாசு குடோன் தீப்பிடித்து வெடித்தது. ஒரே கட்டடத்தில் அருகருகே செயல்பட்ட ஹோட்டல், இரு மரக்கடைகள் அப்படியே விழுந்து தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட பொக்லைன் இயந்திரங்கள். 30-ஜூலை-2023