வேலூர் கோட்டம்
வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்துார், ராணிப்பேட்டை
போட்டோ

75 வது சுதந்திர தின விழாவையொட்டி அனைவரது இல்லங்களிலும் தேசிய கொடியை ஏற்ற வலியுறுத்தி மூன்றாம் வகுப்பு மாணவர் தேவேஷ்சாய் திருவண்ணாமலை கிரிவலப் பாதை மலையடிவாரத்தில் பெரிய பாறையின் மீது அமர்ந்து தேசிய கொடி ஏந்திய படி பல்வேறு யோகாசனங்களை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.14-ஆக-2022

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டும் மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்த பதாகையை கையில் பிடித்தபடி ஓடும் பைக்கில் நின்று சாகசம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய இளைஞர் சந்தோஷ்குமார். இடம்: ரிங் ரோடு, திருவண்ணாமலை14-ஆக-2022

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் வளாகம் முழுவதும் தேசிய இந்து கோவில்கள் பவுண்டேஷன் சார்பில், உழவாரப் பணியில் ஈடுபட்ட பக்தர்கள்.14-ஆக-2022

தொடர் விடுமுறை காரணமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய கொளுத்தும் வெயிலும் பொருட்படுத்தாமல், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
14-ஆக-2022