Advertisement

வீட்டை காலி செய்ய சொன்ன உரிமையாளரை பெட்ரோல் ஊற்றி எரித்த பெண் கைது



புதுச்சேரி : வீட்டை காலி செய்யுமாறு கூறியதால், ஆத்திரமடைந்த பெண், கடைக்குள் புகுந்து டைலர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி, அரியாங்குப்பம், அருந்ததிபுரம், அன்னை நகரை சேர்ந்தவர் சுகுமாறன், 50; டைலர். தியாகு முதலியார் வீதியில் பேன்சி டெக்ஸ்டைல் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார்.

இவரது கடைக்கு கடந்த 2002ம் ஆண்டு முதல் குமுதா, 58; என்ற பெண் பூஜைக்கு பூ கொடுத்து வந்தார். கஷ்டத்தில் இருந்த அவருக்கு சுகுமாறன் பண உதவிகள் செய்து வந்தார்.

இந்நிலையில், தனது மகள் ஜீவிதா (எ) விஜி, 40; கணவருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக பிரிந்து வந்து விட்டதாகவும், 2 பெண் குழந்தைகளுடன் தங்குவதற்கு இடம் இன்றி இருப்பதாக குமுதா கூறியுள்ளார். அதனால் சுப்ரமணி, சிவா வீதியில் உள்ள மனைவிக்கு சொந்தமான வீட்டில் ஜீவிதா தங்கி கொள்ள சுகுமாறன் அனுமதி வழங்கினார்.

கடந்த 2018ம் ஆண்டு முதல் ஜீவிதா அந்த வீட்டில் தங்கி உள்ளார். வீட்டின் ஒரு பகுதி குடோனாக பயன்படுத்தப்பட்டு வந்தது. சமீபத்தில் சுகுமாறன் அந்த வீட்டிற்கு சென்றபோது, அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டிற்கு வந்து செல்வதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

வீட்டை காலி செய்யுமாறு சுகுமாறன் கூறியதற்கு, குமுதா மறுத்து விட்டார். இதனால் இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் மதியம் தியாகு முதலியார் வீதியில் உள்ள டைலர் கடைக்கு சென்ற குமுதா, யாரும் எதிர்பாராத விதத்தில் தான் கொண்டு வந்த பெட்ரோலை, சுகுமாறன் மீது ஊற்றி தீ வைத்தார்.

கடை ஊழியர்கள் தீயை அணைத்து சுகுமாறனை காப்பாற்றினர். அவருக்கு தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் தீக்காயம் ஏற்பட்டது. அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து, குமுதாவை கைது செய்து, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement