Advertisement

பிரதமருக்கு குடும்பமே இந்தியா தான் கவர்னர் தமிழிசை பெருமிதம்



நெட்டப்பாக்கம் : பிரதமருக்கு குடும்பமே இந்தியா தான் என, கவர்னர் தமிழிசை பேசினார்.

மடுகரையில் நடந்த அரசு விழாவில், அவர், பேசியதாவது:

முத்ரா கடன், இலவச காஸ், மருத்துவக் காப்பீடு, விபத்து காப்பீடு, மானிய விலையில் பயிர் காப்பீடு ஆகிய திட்டங்கள் அனைத்துக் குடும்பங்களும் நலம்பெற வேண்டும் என்பதற்காக துவக்கப்பட் டுள்ளன.

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் விபத்துக்குள்ளான நபர் ஐந்து லட்சம் ரூபாய் வரை இலவசமாக சிகிச்சை பெறமுடியும். இத்திட்டத்தின் மூலம் பலரின் உயிர் காப்பாற்றப்பட்டு வருகிறது.

சுய உதவிக் குழுக்களில் பெண்கள் தான் இருக்கிறார்கள். ஒரு பெண்ணிற்கு தரப்படும் பொருளானது, அது அவருக்கு மட்டும் பலனளிக்காமல், அவரை சார்ந்தவருக்கும், குடும்பத்திற்கும் உதவும்.

பெண்கள் கையில் பொருளாதாரம் இருந்தால் நாட்டின் பொருளாதாரம் வளரும் என்பதே பிரதமரின் நம்பிக்கை.

அதனால் தான் சுய உத விக்குழுவிற்கு குறைந்த வட்டியில் கடன் கொடுக்கப்படுகிறது. இதன்மூலம் கந்து வட்டி, தண்டல் வட்டிக்காரர்களிடம் மாட்டிக் கொள்ள வேண்டிய சிக்கல் இல்லை.

நாம் வேலை தேடுபவர்களாக இல்லாமல்; வேலை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும் என, பிரதமர் கூறுகிறார்.

மக்கள் அருகில் இருக்கும் நிலையங்களில் உங்களுக்கு உதவக்கூடிய திட்டங்களை அறிந்து பயன்பெற வேண்டும். பிரதமருக்கு குடும்பமே இந்தியா தான்.

இவ்வாறு கவர்னர் பேசினார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement