Advertisement

மகளிருக்கு ஊக்க தொகைக்கான அடையாள அட்டை வழங்கல்

ADVERTISEMENT


புதுச்சேரி :' வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மகளிர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான அடையாள அட்டையை வைத்தியநாதன் எம்.எல்.ஏ., வழங்கினார்.

புதுச்சேரி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மகளிர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்குவதற்கான திட்டம் துவங்கப்பட்டது. இதில் லாஸ்பேட்டை தொகுதியில் முதற்கட்டமாக 600 மகளிர்களுக்கு இத்திட்டம் துவங்கப்பட்டது.

காங்., சட்டசபை தலைவர் வைத்தியநாதன், மகளிர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான அடையாள அட்டையினை வழங்கினார். நிகழ்ச்சியில் கமலா அறக்கட்டளை முதன்மை செயலர் ரமா வைத்தியநாதன், காங்., நிர்வாகிகள், கமலா அறக்கட்டளை நிர்வாகிகள், தொகுதி பெண்கள் கலந்து கொண்டனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement