Advertisement

குப்பைக்கு பதில் மண் ஏற்றி

ADVERTISEMENT


கிராமப்புறங்களில் அள்ளப்படும் குப்பையின் எடையை அதிகரிக்க, டன் கணக்கில் மண் ஏற்றி நுாதன முறையில் முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுச்சேரியில் அகற்றப்படும் குப்பைகள், குருமாம்பட்டு குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. அங்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை என, பிரித்து பயோ மைனிங் முறையில் அகற்றப்படுகிறது.

நகர பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக சுவச்சதா நிறுவனமும், கிராமப்பகுதியான வில்லியனுார், நெட்டப்பாக்கம், மண்ணாடிப்பட்டு, பாகூர் உள்ளிட்ட பகுதிக்கு கடந்த 6 மாதமாக எச்.ஆர்.ஸ்கொயர் நிறுவனம் குப்பைகள் அகற்றுகிறது. ஒரு டன் குப்பையை அகற்றினால், ரூ. 2,500 அரசு வழங்குகிறது.

கிராமப்புறங்களில் டிராக்டர் டிரெய்லர்கள் மூலம் குப்பைகள் அகற்றப்படுகிறது. ஒரு நாளைக்கு குறைந்தது 2 முதல் 4 டன் வரை குப்பை அகற்றுகின்றனர். கிராமப்பகுதியில் குப்பை அகற்றுவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக ஏற்கனவே புகார்கள் வந்துள்ளது.

இந்நிலையில், சில இடங்களில் குப்பைக்கு பதில் மண்ணை வெட்டி எடுத்து முதலில் டிராக்டர் டிரெய்லரை நிரப்புகின்றனர். பின், அதன் மீது குப்பையை ஏற்றி கொள்கின்றனர். கொண்டு செல்லும் குப்பையின் எடையை அதிகரிக்க மண்ணை ஏற்றி சென்று நுாதன முறையில் முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement