Advertisement

ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரியில் கருத்தரங்கு

ADVERTISEMENT

புதுச்சேரி : ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரியில், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுவுடன் இணைந்து, 'செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரம் கற்றலில் சுகாதாரத்தை நோக்கி, ஆராய்ச்சி போக்குகள் மற்றும் தொழில் நுட்பங்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

கல்லுாரியின் கணினி அறிவியல் துறை, செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் துறை, செயற்கை நுண்ணறிவு தரவு அறிவியல் துறை ஆகிய மூன்று துறைகள் இணைந்து கருத்தரங்கை நடத்தின. கல்லுாரி தலைவர் ராஜா, சிவராம் ஆல்வா, பொருளாளர் விமல், முதல்வர் மகேந்திரன், துணை முதல்வர் மெட்டில்டா, பேராசிரியர் சிந்து முன்னிலை வகித்தனர்.

கணினி அறிவியல் துறை பேராசிரியர் குமரன், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றலின் இன்றைய சிறப்பம்சங்கள் பற்றியும், சுகாதாரத் துறையில், அதன் பயன்பாடுகள் பற்றியும் விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து, பேராசிரியர்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டு நோய்களை முன்னரே கணித்து, அதனை சீர்படுத்தும் முறை, நோய்களுக்கு ஏற்றவாறு துல்லியமான மருந்தினை கணிக்கும் முறை மற்றும் அறுவை சிகிச்சை மேம்படுத்துதல் குறித்து விளக்கினர்.

நிகழ்ச்சியில், ஒருங்கிணைப்பாளர் கனிமொழி, இணை ஒருங்கிணைப்பாளர் உஷாராணி, துறை தலைவர் மஞ்சுபாலா உட்பட பலர் பங்கேற் றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement