Advertisement

என்னமோ நடக்குது... மர்மமா இருக்குது... இளைஞர்கள் விரக்தி



புதுச்சேரி காவல் துறையில் காலியாக உள்ள போலீஸ் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கும், ரேடியோ டெக்னீஷியன் பணியிடங்களுக்கும், கடந்த 2018ம் ஆகஸ்ட் 20ம் தேதி அறிவிப்பு வெளியானது.

நான்கு ஆண்டுகளுக்கு பின் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதியன்று, ரேடியோ டெக்னீஷியன் பணிக்கான உடற்தகுதிக்கான தேர்வு நடைபெறுவதற்காக ஹால் டிக்கெட்டும் வெளியிடப்பட்டது. ஆனால், அன்றைய தினம் திடீரென ரேடியோ டெக்னீஷியன் பணிக்கான உடற்தகுதி தேர்வு நிர்வாக காரணத்தினால் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ரேடியோ டெக்னீஷியன் பணியுடன் அறிவிக்கப்பட்ட போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கு தேர்வு நடத்தி முடித்து அனைவரும் பணியிலும் சேர்ந்து விட்டனர். அதன் பிறகு புதிதாக வெளியிடப்பட்ட போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கும் தேர்வு நடத்தி முடித்து, பயிற்சியில் உள்ளனர். அடுத்து 500 ஊர்க்காவல் படை வீரர் பணிக்கும் விண்ணப்பம் வெளியாகி விட்டது.

ஆனாலும், ரேடியோ டெக்னீஷியன் பணிக்கு இன்னும் தேர்வு நடத்தப்படாமல் உள்ளது. இதனால், ரேடியோ டெக்னீஷியன் பணிக்கு விண்ணப்பித்து ஐந்து ஆண்டு காத்திருக்கும் புதுச்சேரி இளைஞர்கள் விரக்தியில் உள்ளனர்.

ஊர்க்காவல் படை வீரர்கள் தேர்வின்போதாவது, ரேடியோ டெக்னீஷியன் பணிக்கான தேர்வினையும் நடத்த வேண்டும் என்பதே இளைஞர்களின் கோரிக்கையாக உள்ளது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement