Advertisement

விமானம் தாமதம்



மதுரை ' மதுரை - துபாய் தனியார் விமானம் தினமும் காலை 10:20 மணிக்கு மதுரை வரும். மதுரையிலிருந்து மதியம் 12:10 மணிக்கு புறப்பட்டு 3:20 மணிக்கு துபாய் சென்றடையும். நேற்று காலை 10:30 மணிக்கு மதுரை வந்தது. பயணிகள் 170 பேர் துபாய் செல்ல காத்திருந்தனர்.

குடியேற்ற பிரிவு அதிகாரிகள் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை பதிவு செய்தபோது, ஆன்லைனில் தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டது. இதனால் காலை 9:00 மணிக்கு துவங்க வேண்டிய பயணிகள் சோதனை 2:00 மணி நேரம் தாமதமாக துவங்கியது.

விமானம் தாமதமாக மதியம் 2:30 மணிக்கு துபாய் புறப்பட்டது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement