Advertisement

போலீஸ் தேர்வில்   அலைபேசிக்கு தடை



மதுரை, : தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறையின் காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு மதுரையில் 13 மையங்களில் இன்று (டிச.,10) நடக்கிறது.

மைய கண்காணிப்பு, பாதுகாப்பு பணிக்குச் செல்லும் அலுவலர்கள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். தேர்வில் பங்கேற்போர் அலைபேசி, ப்ளூடூத், எலக்ட்ரானிக் வாட்ச் உள்ளிட்ட சாதனங்கள் கொண்டுவர அனுமதிக்கக்கூடாது.

காப்பி அடிப்பதை தடுக்க பணியில் விழிப்புடன் இருக்க வேண்டும் என போலீஸ் கமிஷனர் லோகநாதன் அறிவுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தலைமையிடத்து துணை கமிஷனர் மங்களேஸ்வரன் பங்கேற்றார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement