Advertisement

அஸ்வகந்தா வளர்க்க விவசாயிகளுக்கு அழைப்பு

ADVERTISEMENT


புதுச்சேரியில் அஸ்வகந்தா மூலிகை செடி வளர்ப்பை ஊக்குவிக்க, இந்திய மருத்துவ முறைகள் மற்றும் ஹோமியோபதி இயக்குனரகம் தயாராகி வருகிறது.

அற்புதமான மருத்துவ குணங்களை கொண்ட, வடமொழியில் அஸ்வகந்தா என்றும், தமிழகத்தில் அமுக்கிரா கிழங்கு என்றும் அழைக்கப்படும் அஸ்வகந்தா மூலிகை செடி மனித உடலில் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை கொண்டது.

இரைப்பை, குடல் மற்றும் சுவாச தொற்றுகளை குணப்படுத்துதல், சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் சுரப்பை அதிகரித்தல், மூட்டு வீக்கம், மூட்டு வலி, புற்றுநோய் கட்டிகளை அழிப்பது உள்ளிட்ட பல்வேறு விதமான நோய்களுக்கு இந்த செடியின் இலைகள் மற்றும் வேர்களில் இருந்து எடுக்கப்பட்ட சாறு அல்லது பொடியானது ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படுகிறது.

இந்த மூலிகைக்கு உலகம் முழுவதும் 7 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு தேவையுள்ளது. இந்த ஆண்டை அஸ்வகந்தா ஆண்டாக மத்திய அரசு முன்னெடுத்து உள்ளது.

அதையொட்டி நாடு முழுவதும் இதன் வளர்ப்பு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியிலும் அஸ்வகந்தா வளர்ப்பை ஊக்குவிக்க, முதல்கட்டமாக 50 விவசாயிகளை தேர்வு செய்து பயிற்சி அளிக்க, புதுச்சேரி இந்திய மருத்துவ முறைகள் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் தயாராகி வருகிறது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement