Advertisement

அமலோற்பவம் பள்ளியில் பாட்டுப்போட்டி பரிசளிப்பு

ADVERTISEMENT


புதுச்சேரி : அமலோற்பவம் மேல் நிலைப் பள்ளி மற்றும் அமலோற்பவம் லுார்து அகாடமி இணைந்து 'கிறிஸ்துமஸ் பாட்டுப்போட்டி நேற்று முன்தினம் துவங்கியது.

அமலோற்பவம் லுார்து அகாடமி உள்ளரங்கில் போட்டி நடந்தது.

ஜான் டூயி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விழுப்புரம், குளூனி சி.பி.எஸ்.இ., பள்ளி, புனித பேட்ரிக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தி ஸ்டெடி எக்கோல் சர்வதேச பள்ளி, பில்லாபாங் மேல்நிலைப் பள்ளி, பி.எஸ்.பி.பி., மில்லேனியம் மேல்நிலைப்பள்ளி என, 6 பள்ளிகள் பங்கேற்றன.

துவக்க விழாவில் அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி முதல்வர் ஆன்டோனியோஸ் பிரிட்டோ வரவேற்றார். அருட் தந்தைகள் பாலசிங்கம் பீட்டர், ஜேசுதாஸ் தீபகம் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.

தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில், அமலோற்பவம் பள்ளி குழுமத்தின் நிறுவனர் லுார்துசாமி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக அருட்தந்தைகள் பிச்சைமுத்து, டெலமோர், துாய இதய ஆண்டவர் பசிலிக்கா அருட்தந்தை அருள் புஷ்பம், மறை மாநில சொத்து கண்காணிப்பாளர் மற்றும் இயக்குனர் செயின்ட் ஆகியோர், முதல் பரிசு வென்ற குளுனி சி.பி.எஸ்.இ., பள்ளிக்கும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை வழங்கினர்.

இரண்டாம் பரிசு வென்ற தி ஸ்டெடி எக்கோல் சர்வதேச பள்ளிக்கு ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசு வென்ற பில்லாபாங் மேல்நிலைப் பள்ளிக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியை மாணவர்கள் நிதின், பிரகதீஸ்வரி, ஓவியா, ஜெய்ஆகாஷ் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement