Advertisement

இளைஞர்கள் ஓட்டம்: தியேட்டரில் பரபரப்பு சினிமா தியேட்டரில் பரபரப்பு



புதுச்சேரி போலீஸ் துறையில் அதிரடி காட்டி வரும் டி.ஐ.ஜி., பிரிஜேந்திர குமார் யாதவ் தனது குடும்பத்தினருடன், நேற்று முன்தினம், நகர பகுதியில் உள்ள சினிமா தியேட்டருக்கு சாதாரண உடையில் 'அனிமல்' சினிமா படம் பார்க்க சென்றார். இரவு 10:00 மணி காட்சி என்றாலும், தியேட்டரில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

அப்போது, தியேட்டருக்கு குடிபோதையில் கும்பலாக வந்திருந்த 15க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்களை கிண்டல் செய்தவாறு இருந்தனர். முன் சீட் மீது கால்களை வைத்து, அடாவடியாக கத்தி, கூச்சல் போட்டனர். போதை கும்பலின் செயல்களை கண்ட இளம்பெண்கள் செய்வதறியாது திகைத்தனர்.

அந்த கும்பலின் அடாவடியை கண்ட டி.ஐ.ஜி., பிரிஜேந்திர குமார் யாதவ் நேரடியாக களம் இறங்கினார். அந்த கும்பலிடம் சென்ற அவர், 'யார் நீங்கள்... ஏன் பெண்களை இப்படி கிண்டல் செய்கிறீர்கள்... அதற்கு தண்டனை என்ன தெரியுமா... எங்கிருந்து வருகிறீர்கள்...' என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

வந்தவர் டி.ஐ.ஜி., என்பது தெரிந்ததும், போதை இளைஞர்கள் கும்பல் அரண்டு போனது. அடுத்த நிமிடமே கும்பலில் இருந்த இளைஞர்கள் சிலர் நைசாக நழுவ துவங்கினர். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் படிப்பதாக தெரிவித்த அவர்களை கடுமையாக எச்சரித்த டி.ஐ.ஜி., 'இதேபோல் இனி எங்காவது செய்தால், சும்மா விட மாட்டேன்' என கோபத்தில் கொந்தளித்தார்.

தொடர்ந்து, போதையில் இருந்த அனைவரும் சினிமா தியேட்டரில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இந்த அதிரடியை கண்ட இளம் பெண்கள் கும்பலாக சென்று, டி.ஐ.ஜி.,க்கு நன்றி தெரிவித்தனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement