Advertisement

பானை பிரி அமைத்தால்... நீர்வளத்துறை எச்சரிக்கை



திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும் நிலையூர் கால்வாய்களில் பானை பிரி அமைப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத்துறை எச்சரித்துள்ளது.

திருப்பரங்குன்றம் தென்கால், பானாங்குளம், செவ்வந்திகுளம், குறுகட்டான், சேமட்டான், மேல நெடுங்குளம், நிலையூர் பெரிய கண்மாய்கள் உள்ளன. வைகை அணையில் திறக்கப்படும் தண்ணீர், மழை நீரால் நிலையூர் கால்வாய்கள் மூலம் இக்கண்மாய் நிரம்பும். இந்த ஆண்டு குறைந்த நாட்களே தண்ணீர் திறக்கப்படுகிறது.

நிலையூர் கால்வாயில் பல இடங்களில் பானைப்பிரி அமைத்து மீன் பிடிக்கின்றனர்.

பானை பிரி அமைப்பவர்கள் அருகில் உள்ள ஷட்டர்களை அடைத்து விடுகின்றனர்.

இதனால் கண்மாய்கள் முழுமையாக நிரம்புவதில்லை. தண்ணீர் தடுக்கப்படுவதால் கால்வாய் ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று வீணாகிறது.

பானை பிரி அமைத்தவர்கள் உடனடியாக அகற்றவேண்டும். இல்லையெனில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத் துறையினர் எச்சரித்துள்ளனர்



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement