Advertisement

இன்றைய நிகழ்ச்சி /10.12.23



கோயில்

பிரதோஷ பூஜை, சந்த்ர மவுலீஸ்வர சுவாமிக்கு சிறப்பு பூஜை, ருத்ர ஜபம் செய்த கலசங்களால் அபிேஷகம், மாலை 4:30 மணி, கிருத்திகா மண்டல வேதபாராயணம், மாலை 6:30 மணி, காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை.

பக்தி சொற்பொழிவு

சூடிக்கொடுசுடர் கொடியாள்: நிகழ்த்துபவர் - ஆசிரியர் சண்முக திருக்குமரன், எஸ்.எம்.கே., திருமண மண்டபம், 12, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லைபாலு, மாலை 6:30 மணி.

ராமாயண தத்துவம்: நிகழ்த்துபவர் - கணேசன், ராமகிருஷ்ணமடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.

பொது

மரக்கன்றுகள் நடும் விழா: வைகை வடகரை கபடி சிலை, செல்லுார், மதுரை, ஏற்பாடு: தண்ணீர் தண்ணீர் பவுண்டேஷன், தலைமை: நிறுவனத் தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி, காலை 8:30 மணி.

சவுராஷ்டிரா பெண்கள் வித்யாசங்கம் பவள விழா: என்.எம்.ஆர்.சுப்பராமன் பெண்கள் கல்லுாரி, தெப்பக்குளம் - அனுப்பானடி ரோடு, மதுரை, தலைமை: தலைவர் ஜவஹர்பாபு, பங்கேற்பு: தெலுங்கானா கவர்னர் தமிழிசை, காலை 10:00 மணி; நிர்வாகிகள், ஆசிரியர்களை கவுரவித்தல்: பங்கேற்பு: அமைச்சர் மகேஷ், மதியம் 2:00 மணி.

மனித உரிமைகள் தின விழா: நீதிபதி கிருஷ்ணய்யர் சமுதாயக்கூடம், கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு: மக்கள் சிவில் உரிமைக் கழகம், பங்கேற்பு: தியாகு, காலை 10:30 மணி.

சுற்றுலா கண்காட்சி: ராஜா முத்தையா மன்றம், மதுரை, காலை 11:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை.

காந்திய சிந்தனை சான்றிதழ் பயிற்சி வகுப்பு: ஆரோலேப், வீரபாஞ்சான், பயிற்சி தருபவர் - காந்தி மியூசிய காப்பாட்சியர் நடராஜன், காலை 9:30 மணி.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement