Advertisement

பதவி உயர்வு வழங்க கோரி தலைமை செயலரிடம் மனு 

ADVERTISEMENT


புதுச்சேரி : புதுச்சேரி ஒருங்கிணைந்த ஊழியர்களின் சேவை மற்றும் நலச்சங்கம் பொதுச் செயலாளர் கோவிந்தராஜ், செயலாளர் செந்தில்குமார் தலைமையில், நிர்வாகிகள் பதவி உயர்வு கோரி தலைமை செயலரிடம் மனு அளித்தனர்.

மனுவில், புதுச்சேரி நிர்வாக சீர்திருத்தத் துறை மூலம், அரசு துறைகளில் ஐந்து வருடத்திற்கு மேல் மேல்நிலை எழுத்தராக பணிபுரிந்துவர்களுக்கு அமைச்சக உதவியாளர் பணியில் பதவி உயர்வு வழங்கிட துறை சார்ந்த தேர்வு நடத்தப்பட்டது.

இத்தேர்வை கடந்த 2013, 14, 15,16 ம் ஆண்டுகளில் மொத்தம் 539 பேர் எழுதினர். தேர்வு முடிவு கடந்த 28ம் தேதி வெளியிடப்பட்டது.

அதோடு, இந்த வருட காலிபணியிடங்களையும் சேர்த்து வருட வாரியாக மொத்தம் 360 அமைச்சக உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் பதவி உயர்வு ஆணையை விரைவில் வெளியிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement