Advertisement

புராணத்தில் சனீஸ்வரர்



கால்கள் அழுகியதால் யமன் தனது தந்தை சூரியனிடம் நடந்த சம்பவங்கள் குறித்து கூறினார். கால்கள் குணமாக சிவனை வேண்டி தவம் செய்யுமாறு மகனிடம் சூரியன் கூறினார்.

யமனும் சிவனை நோக்கி கடுந்தவம் செய்து, சிவனின் அருளால் கால்கள் குணமாகப் பெற்று, யம தர்மராஜன் எனும் காலனாகி கடமை தவறாது பணியை மேற்கொண்டார்.

சூரியன் தன் மனைவியான சமுக்ஞையை அழைத்து வரப் புறப்பட்டார். கடும் வெப்பத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று சமுக்ஞையின் தந்தை கூறினார்.

அதன்படி, சூரியன் தன்னிடமிருந்த அபரிமிதமான வெப்பத்தை வெளியேற்ற, வெளியேறிய வெப்பம் மகா விஷ்ணுவுக்கு சக்கராயுதமாகவும், சிவனுக்கு சூலாயுதமாகவும், இந்திரனுக்கு வஜ்ராயுதமாகவும் ஆனது.

எனினும், சூரியனின் கால்களில் மட்டும் வெப்பம் குறையாமல் அப்படியே தங்கி விட்டது. எனவே தான் சூரியனின் சிலைகள், சித்திரங்களில் கால்கள் இடம் பெறுவதில்லை.

- சிதம்பர கீதாராம் குருக்கள்

தொடரும்...------------------------------------------------------------------------------

சனி பெயர்ச்சி மற்றும் கும்ப ராசி பிரவேசம ேஹாத்சவ விழா

நாள்: 20.12.23

நவக்கிரக கோவில்

மொரட்டாண்டி, வானுார் தாலுகா

(புதுச்சேரி அடுத்த கோரிமேடு அருகில்)-------------------------------------------------------------------------------



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement