Advertisement

சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் அபிேஷகம் பக்தர்கள் நேரடியாக செய்வதற்கு ஏற்பாடு

ADVERTISEMENT


புதுச்சேரி : மொரட்டாண்டி நவகிரக கோவிலில் சனீஸ்வர பகவானுக்கு, பக்தர்கள் நேரடியாக நல்லெண்ணெய் அபிேஷகம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில் உள்ள நவகிரக கோவிலில் அமைந்துள்ள பக்தானுக்ரஹ விஸ்வரூப சனீஸ்வரருக்கு வரும் 20ம் தேதியன்று சனிப் பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அன்று காலையில், சனீஸ்வரருக்கு 1,008 லிட்டர் பால் அபிேஷகமும், மாலையில், 80 அடி உயர மகர கும்பத்தில் மகா மகர தீபம் ஏற்றும் நிகழ்வும் நடக்கிறது.

மகர கும்பத்தில் 8,000 லிட்டர் நல்லெண்ணெய் ஊற்றி, 800 கிலோ எள் கொண்டு, 80 மீட்டர் காடா துணியில், 8 கிலோ கற்பூரம் கொண்டு மகா மகர தீபம் ஏற்றப்பட உள்ளது.

இக்கோவிலில் அமைந்துள்ள 12 அடி உயர சனீஸ்வர பகவானுக்கு, 44 நாட்கள் 24 மணி நேரமும் நல்லெண்ணெய் அபிேஷகம் செய்யப்பட உள்ளது. இதற்காக 4 அடி உயர சனீஸ்வர பகவான் சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டு நல்லெண்ணெய் அபிேஷகம் துவங்கியது. சனீஸ்வர பகவானுக்கு பக்தர்கள் தங்களது கைகளால் நல்லெண்ணெய் அபிேஷகம் செய்ய வருமாறு, சிதம்பர கீதாராம் குருக்கள் அழைப்பு விடுத்துள்ளார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement