Advertisement

சித்தானந்த சுவாமி கோவிலில் நாளை108 சங்காபிஷேகம்



புதுச்சேரி : குரு சித்தானந்த சுவாமி கோவிலில் நாளை 11ம் தேதி108 சங்காபிஷேகம் நடக்கிறது.புதுச்சேரி இ.சி.ஆர்., கருவடிக்குப்பத்தில் குரு சித்தானந்த சுவாமி கோவில் உள்ளது.

இக்கோவிலில், கார்த்திகை மாத 4வது சோமவாரத்தை முன்னிட்டு நாளை 11ம் தேதி காலை 6:00 மணிக்கு 108 சங்கு பிரதிஷ்டை, கணபதி ஹோமம், ருத்ர ஹோமம், மகா அபிஷேகம் நடக்கிறது.தொடர்ந்து, சுவாமிக்கு காலை 9:00 மணி முதல் 11:00 மணிக்குள் 108 சங்காபிஷேகம், தீபாராதனை,இரவு 9:00 மணிக்கு, அர்த்தஜாம பூஜை நடக்கிறது.

பூஜைக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன், துணை தலைவர் சசிக்குமார், செயலாளர் மதிவாணன், பொருளாளர் கதிரேசன், உறுப்பினர் அருள் மற்றும் தேவஸ்தான குருக்கள் தேசசேனாதிபதி குருக்கள் செய்து வருகின்றனர்.

பூஜைக்கு பொருட்கள் வழங்க விரும்பும் பக்தர்கள் நாளை 11ம் தேதி காலை தேவஸ்தானத்தில் வழங்கலாம் என, கோவில் நிர்வாகம் தெரிவித்தள்ளது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement