Advertisement

சனீஸ்வர பகவான் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்

ADVERTISEMENT


காரைக்கால் : காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் வரும் 20ம் தேதி சனிபெயர்ச்சி நடைபெறவுள்ளதால் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

காரைக்கால், திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பலித்து வருகிறார். இக்கோவிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா வரும் 20ம் தேதி நடக்கிறது.

அன்று மாலை 5:20 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார். இதையொட்டி, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சனிப்பெயர்ச்சி நடைபெற்ற 10 நாட்களே உள்ள நிலையில் நேற்று பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் சனி பகவானை தரிசனம் செய்ய வந்தனர். அவர்கள் நளன் குளத்தில் நீராடி, கலிதீர்த்த விநாயகரை வணக்கி, தேங்காய் உடைத்து, அதிகாலை முதலே வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கோவில் நடைத்திறக்கப்பட்ட நிலையில், விசேஷ அபிஷேகம், தீபாராதனை நடந்து, சனிபகவான் வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இன்ஸ்பெக்டர் அறிவுசெல்வம் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

டி.ஐ.ஜி., ஆய்வு:



சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி, மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இப்பணிகளை புதுச்சேரி காவல் துறை டி.ஜி.பி., பிரிஜேந்திரகுமார் யாதவ் ஆய்வு செய்தார்.

அப்போது, பக்தர்கள் பாதுகாப்பு, வாகனங்கள் நிறுத்துமிடம், சி.சி.டி.வி., கேமரா பொருத்தும் பணி, அவசர வழிகள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்புகள் குறித்து போலீசாருடன் டி.ஐ.ஜி., ஆலோசனை நடத்தினார்.

ஆய்வில் சீனியர் எஸ்.பி., (பொ) நிதின் கவுகால் ரமேஷ், எஸ்.பி., சுப்ரமணியன் உட்பட பலர் உடனிருந்தனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement