Advertisement

பொருளாதார இலக்கை எட்டுவதில் வேகம்: அமித் ஷா பெருமிதம்.

Audio இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

ADVERTISEMENT
டேராடூன்: ''பொருளாதார இலக்குகளை எட்டுவதில் தொடர்ந்து நம் நாடு வேகம் காட்டி வருகிறது. வரும், 2025ம் ஆண்டுக்குள், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கையும் எட்டுவோம்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டார்.

உத்தரகண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. தலைநகர் டேராடூனில், இரண்டு நாள், சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடந்தது. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது.

நடவடிக்கை

இதில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பேசியதாவது:

பொருளாதார இலக்குகளை எட்டுவதில் நம் நாடு பெரும் வேகத்தை காட்டி வருகிறது. கடந்த, 10 ஆண்டுகளில் இந்த வேகம் அபரிமிதமாக இருந்து வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய தலைமை மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய நடவடிக்கைகளே இதற்கு காரணம். இலக்குகள் நிர்ணயிக்கப்படுவதுடன், அதை எட்டுவதற்கு முழு முனைப்பு கொடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த, 2014ல் உலகின் பெரும் பொருளாதார நாடுகள் பட்டியலில், 11வது இடத்தில் இருந்த நாம், தற்போது, ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளோம். நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து, 75 ஆண்டுகளில் இல்லாத வேகம் இது.

மிக விரைவில், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடு என்ற இலக்கை எட்ட உள்ளோம். அதுபோல, 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம், அதாவது, 417 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார நாடாக, 2025க்குள் நாம் முன்னேற உள்ளோம்.

கடந்த, 10 ஆண்டுகளில் தனிநபர் வருமானம் இரட்டிப்பாகி உள்ளது. மேலும், 13.5 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம்.

சர்வதேச நிதியம், உலக வங்கி என, பல சர்வதேச அமைப்புகளும், நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பிரமிப்புடன் பார்க்கின்றன. நம் மீது பெரும் நம்பிக்கையையும் வைத்துள்ளன.

கேள்வி எழுந்தது

இந்த மாநாட்டின் வாயிலாக, 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் திரட்ட திட்டமிட்டுள்ளதாக முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறினார்.

அது சாத்தியமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளை அவர் திரட்டியுள்ளார். இந்த மாநிலத்தை, பிரதமராக இருந்த வாஜ்பாய் உருவாக்கினார். அதை பிரதமர் மோடி கட்டமைத்து வருகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.வாசகர் கருத்து (7)

 • g.s,rajan - chennai ,இந்தியா

  இந்தியாவின் பொருளாதாரம் பல ட்ரில்லியன் வரை எட்டும் ,சாமானியனின் பொருளாதாரம் அஞ்சுக்கும்,பத்துக்கும் நித்தம் அல்லாடும் வகையில் இருக்கும் .

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  அது ஐந்து மில்லியன் டன் இல்லை ஐந்து டிரில்லியன் டாலர் என்பது அமைச்சருக்கு புரிந்து விட்டதாம். அதான் ரிப்பீட்டு.

 • g.s,rajan - chennai ,இந்தியா

  இந்தியாவில் லஞ்சம் மற்றும் ஊழலில் தானே ஓவர் ஸ்பீட் ....

 • ஆரூர் ரங் -

  வரம்புக்கு மீறி ஆடம்பரச் செலவுகளை செய்வது ஃபேஷனாகிவிட்டது.🤔 நிலத்தை மலடாக்கி விளைவித்த தானியங்களை ஏற்றுமதி செய்து ஈட்டப்படும் அன்னியச் செலாவணியை வாரிக் கொடுத்து பெட்ரோல் இறக்குமதி செய்தால் அதன் விலை எவ்வளவு ஏறினாலும் வாகனங்கள் விற்பனையும் பயன்பாடும் உச்சத்தை எட்டியுள்ளது. பொறுப்பற்ற பொதுமக்களுக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அர்த்தமில்லை😬. நுகர்வு கலாச்சாரம் சூழ்நிலை மற்றும் சுகாதார கேடுகளில் விட்டுள்ளது. முதல்நாள் முதல் ஷோ பார்க்க 2000 செலவழித்து விட்டு... ஆனாலும் விலைவாசி பற்றி போலியான புலம்பல்கள்.

 • Sheshathri Velayutham - ,

  கடந்த பத்து வருடங்களில் இவர்களின் சாதனை: ஜீஎஸ்டி டார்கெட் அஜிவ்மென்ட், வித் 50%+ ஜீஎஸ்டி பெட்ரோல் டீசல், சிலிண்டர் விலை 450 டூ 1000, அமலாக்க துறை மூலம் பழி வாங்குதல், மோர் ப்ரண்ட்லி வித் கார்ப்பரேட்,பணமதிபிழப்பு.சென்ரல் எலக்ஷன்காக கடந்த ஒரு வருடமாக பெட்ரோல் விலை ஏற்ற வில்லை இவ்வளவு தான்.வேஸ்ட் பிஜேபி அதற்குமேல் வேஸ்ட் இந்த திமுக.என்னத்த சொல்றது பொலம்பல் மட்டும் தான் மிச்சம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement