Advertisement

தனியாக வசித்த மூதாட்டி கழிவறையில் சடலமாக மீட்பு



புதுச்சேரி : ரெட்டியார்பாளையம் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சரசு, 70. இவருக்கு ஒரு மகன், 4 மகள்கள் உள்ளனர். மகன் பிரான்ஸ் நாட்டில் உள்ளார். சரசு வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

அவரை, அவர்களின் மகள்கள் அவ்வப்போது வந்து பார்த்து செல்வது வழக்கம். நேற்று மாலை சரசு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் சுரசு உறவினர் தாமஸ் என்பவருக்கு தகவல் தெரவித்தனர். உடனே தாமஸ், அங்கு சென்று பார்த்தபோது வீட்டு கழிவறையில் சரசு இறந்து கிடந்தார்.

இதுபற்றி போலீசாருக்கு தாமஸ் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement