Advertisement

லேப்டாப் திருடியவர் கைது

ADVERTISEMENT


புதுச்சேரி, : புதுச்சேரியில் பிரியாணி கடையில் 'லேப்டாப்' திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி வி.வி.பிள்ளை வீதியைச் சேர்ந்தவர் முகமது அவுரங்கசீப், 33. இவர் காமராஜ் சாலையில் பிரியாணி கடை வைத்துள்ளார். இவர் கடையில் நேற்று காலை ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான லேப்டாப் வைத்திருந்தார்.

கடையில் சாப்பிட வந்தவர்களிடம் ஆர்டர் எடுக்க சென்ற முகமது, திரும்பி சென்று பார்த்தபோது லேப்டாப் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அவரது புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் கடையில் இருந்த சி.சி.டி.வி., கேமராவை ஆய்வு செய்தனர்.

அதில் விழுப்புரம் மாவட்டம் பீலக்குப்பம் பகுதியைச் சேர்ந்த தர்மதுரை, 45, என்பவர் லேப்டாப்பை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். குற்றவாளியை உடனே கண்டுபிடித்த உருளையன்பேட்டை போலீசாரை சட்டம் ஒழுங்கு எஸ்.எஸ்.பி., நாரா சைத்தன்யா, எஸ்.பி., ஸ்வாதி சிங் பாராட்டினர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement