Advertisement

ரூ.290 கோடி!: ஒடிசாவில் ஐ.டி., சோதனையில் சிக்கியது: மூட்டை மூட்டையாக கைப்பற்றப்பட்டது பணம்

Audio இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

ADVERTISEMENT
புவனேஸ்வர்: ஒடிசாவில் மதுபான ஆலை மற்றும் அதற்கு சொந்தமான இடங்களில், ஐ.டி., எனப்படும் வருமான வரித்துறை நான்கு நாட்களாக நடத்திய சோதனையில், இதுவரை, 290 கோடி ரூபாய் மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.பி., வீட்டிலும் ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், அவர் விரைவில் கைதாகலாம் என தெரிகிறது.

ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, 'பவுத் டிஸ்டிலெரி' எனப்படும் மதுபான நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, மதுபான ஆலை, அந்த நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் அதற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் கடந்த 6ம் தேதி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஒடிசாவின் புவனேஸ்வர், சம்பல்பூர், பொலாங்கீர், திதிலாகர், பவுத், சுந்தர்கர், ரூர்கேலா ஆகிய இடங்களில் கடந்த நான்கு நாட்களாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

பொலாங்கீரில் உள்ள மதுபான நிறுவனத்தின் அலுவலகத்தில் இருந்து நேற்று முன்தினம், 150 மூட்டைகளில் பணம் பறிமுதல் கைப்பற்றப்பட்டது.

சோதனை



அதுமட்டுமின்றி இந்த நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரசின் ராஜ்யசபா எம்.பி., தீரஜ் சாஹு வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களிலும் அதிகாரிகள் குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தினர்.

அப்போது அவரது வீட்டில் அலமாரியில் கட்டுக்கட்டாக புத்தம் புதிய கரன்சி நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஜார்க்கண்டின் ராஞ்சி, லோஹர்தாகா ஆகிய பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், பொலாங்கீர் மாவட்டத்தில் சுடாபரா பகுதியில் இருந்து மேலும் 20 பண மூட்டைகள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன. இதன் மதிப்பு மட்டுமே, 50 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

ஒடிசா மற்றும் ஜார்க்கண்டில் இருந்து தொடர்ச்சியாக பணம் கைப்பற்றப்பட்டு வருவதால், பல்வேறு வங்கி கிளைகளில் இருந்து பெறப்பட்ட 40க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் வாயிலாக பணம் எண்ணும் பணி நடந்து வருகிறது.

நேற்றிரவு வரை எண்ணப்பட்டதில், 250 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக கூறிய அதிகாரிகள், தொடர்ந்து பணத்தை எண்ணி வருவதால் மொத்த எண்ணிக்கை 300 கோடி ரூபாயை தாண்டும் என தெரிவித்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பண மூட்டைகளை பத்திரமாக எடுத்துச் செல்ல ஏராளமான வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட பணத்தில் பெரும்பாலானவை 500 ரூபாய் நோட்டுகளாக உள்ளதால், அவற்றை எண்ணுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து வருமான வரித் துறை இயக்குனர் சஞ்சய் பஹாதுார் கூறியதாவது: சந்தேகிக்கப்படும் இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பணியில் 150க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பணம் மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அவற்றிற்கான மதிப்பு இறுதி செய்யப்பட்ட பின் உறுதியாக தெரிவிக்கப்படும். டிஜிட்டல் ஆவணங்களை சோதனை செய்ய ஹைதராபாதில் இருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். பணம் எண்ணும் பணியில் 40க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அதிக சுமை காரணமாக இயந்திரங்கள் அடிக்கடி பழுதாவதால், பணம் எண்ணும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கருப்புப் பணம்



கைப்பற்றப்பட்ட பணம் பொலாங்கீர், சம்பல்பூர் பகுதியில் உள்ள வங்கி கிளைகளில் வைக்கப்பட்டுள்ளது. வருமான வரி உள்ளிட்ட சோதனை முகமைகளால், ஒரே கட்ட சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள அதிகபட்ச கருப்புப் பணம் இதுவாகும். இவ்வாறு அவர் கூறினார்.

ஒடிசாவில், 290 கோடி ரூபாய் வரை பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இது குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என மாநில பா.ஜ., வலியுறுத்தியுள்ளது. அமைச்சர்கள், எம்.எல்-.ஏ.,க்களுக்கு இதில் தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளதால், அவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் என அக்கட்சி கோரியுள்ளது.

அதே சமயம், வருமான வரித் துறையின் சோதனையை வரவேற்பதாக ஆளும் பிஜு ஜனதா தளம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஊழலின் உச்சக்கட்டம்!



ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரசின் ராஜ்யசபா எம்.பி., தீரஜ் சாஹு வீட்டில் பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஊழல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்திலேயே, இவரிடமிருந்து தான் அதிகம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இப்படிப்பட்டவரைத் தான், மூன்று முறை ராஜ்யசபா எம்.பி.,யாக காங்., தலைவர்கள் தேர்வு செய்துள்ளனர். இவர், ராகுலுக்கு மிகவும் நெருக்கமானவர். காங்கிரசைச் சேர்ந்த ஒருவரது வீட்டிலேயே இவ்வளவு தொகை பறிமுதல் செய்யப்பட்டது என்றால், அந்த கட்சி யில் உள்ள மற்ற ஊழல் தலைவர்களிடம் எவ்வளவு பணம் இருக்கும் என்பதை கணக்கிட்டு பாருங்கள்.

-மீனாட்சி லேகி

மத்திய இணை அமைச்சர், பா.ஜ.,



வாசகர் கருத்து (6)

  • பேசும் தமிழன் -

    இத்தாலி கம்பெனியில் வேலை செய்யும் ஆளிடம் இவ்வளவு பணம் இருந்தால்.... இத்தாலி கம்பெனி முதலாளியிடம் (பப்பு குடும்பம்) எவ்வளவு பணம் இருக்கும் ???

  • வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்

    ராவுளு என்கிற அஃமாக் நல்லுள்ளம் என கூறிக்கொள்ளும் மாநஸ்த்தனை கண்டா வரச்சொல்லுங்க. இங்க ஒரு பைசல் இப்பவே பண்ணியாகணும்..

  • Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா

    பாராளுமன்ற எலெக்ஷனுக்கு இப்பவே பணத்தை நகர்த்த ஆரம்பிச்சிட்டாங்க. இந்த தடவை EDயூம் முதலிலேயே உஷார் ஆகி கிடுக்கி பிடி போட ஆரம்பிச்சதுக்கு ஒரு சபாஷ் போடலாம்.

  • Indhuindian - Chennai,இந்தியா

    அவங்க வீட்டு வாசல்ல ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியான்னு போர்ட் இருக்கறத பாக்காம போயிட்டிங்களே

  • S.Karthi - Trichirapalli ,இந்தியா

    Soon ..all looters will come up under ED

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement