Advertisement

சட்டசபை தேர்தலே எங்கள் இலக்கு

திருநெல்வேலி:''லோக்சபா தேர்தல் எங்கள் இலக்கு அல்ல. 2026 சட்டசபை தேர்தலே இலக்கு'' என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேசினார்.

ச.ம.க.,சார்பில் லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பொறுப்பாளர்களை அறிவிக்கும் பொதுக்கூட்டம் திருநெல்வேலியில் நடந்தது.

அதில் சரத்குமார் பேசியதாவது:

தமிழகத்தில் திராவிட இயக்கங்களின் ஆட்சி தொடர்ந்தால் வட இந்தியர்கள்தான் ஓட்டளிக்கும் நிலை ஏற்படும். சினிமாவில் வாய்ப்பு இல்லாவிட்டாலும் கூட நான் மூடை தூக்கி பிழைப்பேன்.

திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட நூறு கோடி ரூபாய் தேவைப்படும். அந்த தொகை நம்மிடம் இல்லை. கர்ணன் கையில் இருந்ததைத் தான் கொடுத்தார். இப்போதுள்ள ஆட்சியாளர்கள் சுரண்டி கொடுக்கிறார்கள்.

தெலுங்கானாவில் தராத இலவசமா. அங்கிருந்த முதல்வர் குடும்பத்தினர் அனைவரும் பொறுப்பில் இருந்தார்கள். ஆனாலும் தேர்தலில் தோற்றார்கள். தமிழகத்தில் உள்ளவர்கள் அதை பார்த்து புரிந்து கொள்ள வேண்டும்.

2026 சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் வெற்றி பெறுவோம். 2007ல் தொடங்கி 16 ஆண்டுகள் கட்சியை நடத்தி இருக்கிறோம். இன்றும் கூட இந்த கூட்டத்தில் கடைசியில் காலியாக உள்ள நாற்காலிகளை படம் பிடித்து பத்திரிகையில் போடுவார்கள். அதைப் பற்றி கவலை இல்லை.

2024 லோக்சபா தேர்தல் எங்களுக்கு இலக்கு இல்லை. 2026 தமிழக சட்டசபை தேர்தல் தான் இலக்கு. லோக்சபா தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் முக்கியத்துவம் தந்து போட்டியிடுவோம்.

முன்பெல்லாம் வெளிநாடுகளில் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்க இந்தியர்கள் சென்றால் மதிப்பதில்லை. ஆனால் இப்போது வெளிநாட்டு கடைகளில் இந்தியர்களை கண்டால் வாங்குவார்கள் என்று நம்பிக்கையோடு வரவேற்கிறார்கள்.

பிரதமர் மோடியால் இந்தியாவின் நிலை சர்வதேச அளவில் உயர்ந்துள்ளது. பா.ஜ., ஆளும் மாநிலங்களில் ஊழலற்ற ஆட்சியை தந்து கொண்டிருக்கிறார்கள்.

நாங்கள் கல்வி, மருத்துவத்திற்கு மட்டும் இலவசம் வழங்குவோம். 2026ல் நான் தான் முதல்வர் என என் மனைவி ராதிகா கூறிவிட்டார்.நான் முதல்வர் என்பதை காமெடியாக பார்க்காதீர்கள். இது சீரியசான விஷயம். இந்த கூட்டம் முடிந்து செல்பவர்கள் யாராவது டாஸ்மாக் கடை அருகே சென்றால் அவர்களது வாகனத்தின் எண் குறிக்கப்பட்டு கட்சியில் இருந்து தூக்குவேன். சென்னை வெள்ள பாதிப்பு குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார். தொடர்ந்து லோக்சபா மற்றும் சட்டசபை வாரியாக தொகுதி பொறுப்பாளர்கள் பட்டியலை அறிவித்தார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

    மேலும் செய்திகள் :

Advertisement