Advertisement

சாப்ட்வேர் இன்ஜினியர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கல்

திருநெல்வேலி:விபத்தில் இறந்த சிவகாசியை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் குடும்பத்திற்கு ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் காப்பீட்டு நிறுவனம் வழங்கிய இழப்பீட்டுத் தொகை திருநெல்வேலியில் வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட கோர்ட் வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆலோசனைப்படி தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் நீதிபதி பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா மற்றும் நீதிபதிகள் பங்கேற்றனர்.

விருதுநகர்மாவட்டம் சிவகாசியை சேர்ந்த ஜாவித் அஷ்ரப் என்ற சாப்ட்வேர் இன்ஜினியர் 2021ல் வாகன விபத்தில் பலியானார். விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகனத்தின் மீதான வழக்கு மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஜாவித் அஷ்ரபின் தந்தை முகைதீன் அப்துல் காதருக்கு காப்பீட்டு நிறுவனம் ஒரு கோடியே ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டது. காப்பீட்டு நிறுவனம் தந்த காசோலையை முகைதீன் அப்துல் காதரிடம் நீதிபதி பன்னீர்செல்வம் வழங்கினார். மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் ராஜேஸ்வரன், செயலாளர் மணிகண்டன் பங்கேற்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement