Advertisement

போதை ஊசி, மாத்திரை விற்ற மூவர் கைது

நெகமம்:கோவை மாவட்டம், பொள்ளாச்சி, நெகமம் போலீசார், வடசித்துார் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் சந்தேகப்படும்படி வந்த மூன்று பேரை நிறுத்தி விசாரித்தனர்.

அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர்கள், போதை ஊசி மருந்து, மாத்திரை விற்பனை செய்தது தெரிய வந்ததால், மூவரையும் கைது செய்தனர்.

போலீசார் கூறியதாவது:

தேனியை சேர்ந்த முரளிகுமார், 51, பொள்ளாச்சி சேத்துமடையை சேர்ந்த சுரேஷ், 29, டி.கோட்டாம்பட்டியை சேர்ந்த ஜலீல், 47, ஆகியோர், போதை ஊசி பயன்படுத்துவதுடன், விற்பனையிலும் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள், 'ஆன்லைன்' வாயிலாக,ஆப்பரேஷனுக்கு பயன்படுத்தக்கூடிய மயக்க மருந்தை வாங்கி போதைக்கு பயன்படுத்தியதாக தெரிவித்தனர்.

போதைக்கு அடிமையான இவர்கள், ஊசி மருந்தை, 200 -- 300 ரூபாய் வரை விற்பனை செய்துள்ளனர். போதை அதிகம் தேவைப்பட்டால் அதற்கேற்ப 'டோஸ்' அதிகரித்து வழங்கி, அதிக விலைக்கு விற்றுள்ளனர்.

'ஆன்லைன்' வாயிலாக இவற்றை வாங்கினரா அல்லது மருந்து கடைகளில் வாங்கினரா; இவர்களுடன் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது.

இவ்வாறு கூறினர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement