Advertisement

பாலியல் பாதிப்பு குழந்தைகளுக்கு வேலுாரில் சிகிச்சை மையம்

வேலுார்:போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சிகிச்சை மையம், தமிழகத்தில் முதல் முறையாக, வேலுார் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் துவக்கப்பட்டது.

பாலியல் குற்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகள், தங்களுக்கு நேர்ந்த கொடூர துயரத்தை மறந்து, எதிர்காலத்தில் இயல்பாக வாழ, மனரீதியான சிகிச்சை அளிக்கும் வகையில், 'சைல்டு லைன், பிரண்ட்லி யூனிட்' என்ற, சிகிச்சை பிரிவு மையம், தமிழகத்தில் முதல் முறையாக, வேலுார் அரசு மருத்துவ கல்லாரி மருத்துவமனையில் துவக்கப்பட்டுள்ளது.

இந்த வார்டிலுள்ள அறைகளில், சுவற்றில் கார்ட்டூன் ஓவியங்களுடன், பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டு உபகரணங்கள், குழந்தைகளுக்கு பிடித்தமான, 100 புத்தகங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் மனதளவில் சகஜ நிலைக்கு வரும் வரை சிகிச்சை அளிக்கப்படும்.

இந்த பிரிவு மையத்தை, கலெக்டர் குமாரவேல் பாண்டியன் துவக்கி வைத்தார். கல்லுாரி டீன் பாப்பாத்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சஞ்சித் உள்ளிட்டோர் இருந்தனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement