Advertisement

பெண்களை நம்ப வைத்து நகைகள் திருடியவர் கைது

மதுரை:மதுரை, முல்லை நகரைச் சேர்ந்த கவுசல்யா, 'ஆன்லைனில்' இரண்டாவது திருமணத்திற்கு வரன் தேடினார். அப்போது, பரமக்குடி கார்த்திக்ராஜ், 26, அறிமுகமானார்.

இருவரும் மதுரை மால் ஒன்றில் சந்தித்தனர். அப்போது, கார்த்திக்ராஜ் வாங்கிக் கொடுத்த கவரிங் தோடுகளை அணிந்து கொண்ட கவுசல்யா, தன் தங்கத்தோடுகளை பர்சில் வைத்து அவரிடம் கொடுத்துவிட்டு, 'டிரஸிங்' அறைக்கு சென்றார்.

இதை பயன்படுத்தி முக்கால் சவரன் தங்கத்தோடு, ஒரு மொபைல் போனுடன் கார்த்திக்ராஜ் 'எஸ்கேப்' ஆனார். அவரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், ராமநாதபுரம் மாவட்டம், அச்சுதன் வயல் லலிதாவிடம் 3 சவரன், சிவகாசி அய்யனார் காலனி கலைச்செல்வியிடம் 3 சவரன், விருதுநகர் சிவஞானபுரம் பிரேமாவிடம் 5 சவரன் நகைகளை திருடிய வழக்கிலும் கார்த்திக்ராஜ் கைதானார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement