Advertisement

திருநெல்வேலி, தென்காசியில் பள்ளிகளுக்கு விடுமுறை

திருநெல்வேலி:திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை வரை பெய்த பலத்த மழையினால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சியினால் தென் மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு துவங்கி நேற்று காலை வரை மழை பெய்தது. திருநெல்வேலி அருகே 90 மி.மீ., திருநெல்வேலி டவுனில் 44 மி.மீ., பெய்தது. இதனால் திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மழைநீர் குளம் போல தேங்கியது. அதனை ஊழியர்கள் மோட்டார்கள் மூலம் அப்புறப்படுத்தினர். ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் வளாகம், மேலப்பாளையம் குடியிருப்பு பகுதிகள், வண்ணாரப்பேட்டை தெற்கு பைபாஸ் சாலை, திருநெல்வேலி டவுன் ரதவீதி பகுதிகளில் மழைநீர் தேங்கியது. தென்காசி மாவட்டம் சிவகிரியில் 9 மி.மீ., மழை பதிவானது. தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தற்போது பிசான சாகுபடி நெல் நடவு பணி நடக்கிறது. சில இடங்களில் வயல்களில் மழை நீர் தேங்கியது.

துாத்துக்குடி மாவட்டத்திலும் நேற்று காலை வரை பரவலாக மழை பெய்தது. திருச்செந்துார், மெஞ்ஞானபுரம், காயாமொழி சுற்று வட்டாரங்களில் பலத்த மழை பெய்தது. அந்த பகுதிகளுக்கு மட்டும் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

    மேலும் செய்திகள் :

Advertisement