Advertisement

கனிம வள கொள்ளையில் தி.மு.க.,வினர் மத்திய இணையமைச்சர் முருகன் காட்டம்

ADVERTISEMENT
அன்னுார்:''கனிம வள கொள்ளையில் ஈடுபடும் தி.மு.க.,வினர் மற்றும் துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, மத்திய இணையமைச்சர் முருகன் தெரிவித்தார்.

கோவை மாவட்டம், அன்னுார் அருகே பச்சாபாளையத்தில் நடந்த அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற அவர் கூறியதாவது:

அத்திக்கடவு -- அவிநாசி திட்ட பணிகள், அ.தி.மு.க., ஆட்சியில் துவக்கப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டு, அந்த ஆட்சியில் 96 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு விட்டன.

ஆனால், அரசியல் காரணங்களுக்காக தி.மு.க., அரசு தாமதப்படுத்துகிறது. இன்னும் திட்டத்தை செயல்படுத்தாமல் உள்ளது. இந்த திட்டத்திற்காக, மூன்று மாவட்ட மக்கள், 40 ஆண்டுகள் போராடி உள்ளனர்.

காவிரியில் மணல் கொள்ளை நடக்கிறது. கோவை மாவட்டத்தில் கனிம வளக் கொள்ளை நடக்கிறது.

இதில், தி.மு.க.,வினர் ஈடுபடுகின்றனர்; அதிகாரிகள் துணை போகின்றனர். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகம் முழுதும் ஏராளமான கோவில்களில், திருப்பணிகள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேகத்துக்காக, ஹிந்து சமய அறநிலையத்துறை அனுமதிக்கு காத்திருக்கின்றன.

நீலகிரி தொகுதியில் மட்டும், மத்திய அரசு சார்பில், ஆண்டுக்கு 6,000 ரூபாய் ஊக்கத்தொகை, 1.5 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

'ஜல்ஜீவன்' திட்டத்தில் 70 சதவீதம் வீடுகளுக்கு, மத்திய அரசு நிதியில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள், நுாறு சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement