Advertisement

24 மணி நேரமும் பூட்டி கிடக்கும் புறநகர் போலீஸ் ஸ்டேஷன், திறந்திருக்கும் சந்து கடை

ADVERTISEMENT
வாழப்பாடி:வாழப்பாடி உட்கோட்ட பகுதியில் சில இடங்களில் 24 மணி நேரமும் புறநகர் போலீஸ் ஸ்டேஷன் பூட்டியே உள்ளது. அதேபோல், சந்து கடை திறந்து உள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி உட்கோட்ட போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட வாழப்பாடி, காரிப்பட்டி, ஏத்தாப்பூர், உள்ளிட்ட குடியிருப்பு பகுதியில் கட்டிடம் அமைத்து, அனைத்து வசதிகளுடன் துணிச்சலாக சந்து கடைகள் செயல்பட்டு வருகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் செல்ல முடியாமல் அச்சப்படுகின்றனர்.

அதேபோல், குடிமகன்கள் காலையிலேயே குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் தகராறில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தாலும், மாமலுக்காக போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்படுகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரித்து சட்ட விரோதமாக, குடியிருப்பு பகுதியில் செயல்படும் சந்து கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல், வாழப்பாடி உட்கோட்ட பகுதியில் பேளூர், வெள்ளாளகுண்டம் பகுதியில் உள்ள புறநகர் காவல் நிலையம் மற்றும் வாழப்பாடி பஸ் ஸ்டாண்டில் உள்ள போலீஸ் உதவி மையம் செயல்படாமல் பூட்டி கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் கொள்ளை, அடிதடி சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது.
மேலும்,பேளூர், வெள்ளாளகுண்டம் மக்கள் புகார் அளிக்க நீண்ட தூரம் வாழப்பாடி போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பூட்டி கிடக்கும் புறநகர் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் காவல் உதவி மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    போலீஸ் அலுவலர்கள் மாமூல் 'ரவுண்ட்' ஒன்றை மட்டுமே கர்ம சிரத்தையுடன் செய்வதால் ஸ்டேஷனை திறக்க அவசியமே இல்லை போலும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement