Advertisement

கனமழைக்கு எங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை?

Audio இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

ADVERTISEMENT
சென்னை: கனமழை காரணமாக திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (டிச.09) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.9) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் இன்று(டிச.,09) பள்ளிகளுக்கு விடுமுறை என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தொடர் கனமழை எச்சரிக்கை காரணமாக திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.9) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து (1)

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்றாலும், அங்குள்ள ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களை பள்ளியில் சூழ்ந்திருக்கும் மழைவெள்ள நீரை அகற்றவும், கழிவறைகளை சுத்தம் செய்யவும் மட்டும் கூறுவார்கள். பாடம் எதுவும் நடக்க வாய்ப்பில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement