Advertisement

5 வயது மகனை மிதித்து கொன்ற தந்தை: மனைவியையும் கொன்றதாக ஒப்புதல்

ADVERTISEMENT
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா, கட்டிகானப்பள்ளியை சேர்ந்தவர் சந்தோஷ், 35, டெய்லர். இவரது மனைவி சுகன்யா. ஏழு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. தம்பதியரின் மகன் கதிர்செல்வன், 5. கடந்தாண்டு ஜூன் மாதம் கட்டிகானப்பள்ளியில் கிணற்றில் சுகன்யா சடலமாக மீட்கப்பட்டார். அதன் பின் மகன் கதிர்செல்வத்தை, சந்தோஷ் வளர்த்து வந்தார். அங்கன்வாடி மையத்தில் கதிர்செல்வன் படித்து வந்தார்.
குடிப்பழக்கத்துக்கு அடிமையான சந்தோஷ், நேற்று மாலை வீட்டுக்கு போதையில் வந்தார். மாமனார் வீட்டிற்கு சென்ற சந்தோஷ், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின் வீட்டுக்கு வந்தவர், மகன் கதிர்செல்வன் கழுத்தில் காலை வைத்து மிதித்தார். இதில் படுகாயமடைந்த சிறுவன் சம்பவ இடத்தில் பலியானார். இதையடுத்து சூளகிரி போலீ சார் சந்தோஷை, கைது செய்தனர்.

சந்தோஷிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அப்பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டில் ஓராண்டுக்கு முன் சுகன்யா வசித்தார். இந்நிலையில் தான் அவர் கிணற்றில் சடலமாக மிதந்தார். சூளகிரி போலீசார் தற்கொலை வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் மகனை கொன்ற வழக்கில், போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த சந்தோஷ், 'மனைவி கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழக்கவில்லை; நான் தான் கொலை செய்து கிணற்றில் வீசினேன்' என்று கூறியதாக, போலீசார் தெரிவித்தனர்.

பலாத்காரம் செய்து சிகரெட்டால் சுட்டு பெண் வெட்டி படுகொலைஉ.பி.,யின் சுல்தான்பூரில் கடந்த 3ம் தேதி பெண் ஒருவரின் சடலம் தீயால் சுட்ட காயங்கள் மற்றும் காதில் ரத்தம் வடிந்தநிலையில் கிடந்தது. சடலத்தை மீட்ட போலீசார் விசாரணை நடத்தினர். அந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக சுராஜ் குமார் சோங்கர் என்பரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இது குறித்து விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரி கூறியதாவது: சுராஜ் குமார் சோங்கருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி அந்த பெண் பணம் பெற்றுள்ளார். ஆனால் உறுதியளித்தபடி வேலை தராததால் பணத்தை திருப்பி தருமாறு சோங்கர் கேட்டுள்ளார். அவர் பணத்தை தராமல் இழுத்தடித்ததால், சோங்கர் ஆத்திரமடைந்தார்.
இந்த நிலையில் கடந்த 3ம் தேதி, அந்த பெண்ணை பலாத்காரம் செய்து முகத்தில் சிகரெட் தீயால் சுட்டுள்ளார். கோபம் தணியாததால் கோடரியால் அந்த பெண்ணை வெட்டி கொலை செய்து, சாலையோரத்தில் சடலத்தை வீசி சென்றுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.220 கோடி பறிமுதல்ஒடிசா மதுபான ஆலையில் மூன்றாவது நாளாக நேற்று நடத்தப்பட்ட சோதனையில், 150 பைகளில் வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர் சோதனையில் இதுவரை இங்கு, 220 கோடி ரூபாய் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

24 மணி நேரத்தில் ஒன்பது பச்சிளம் குழந்தைகள் பலிமேற்கு வங்கத்தில், முர்ஷிதாபாத் மருத்துவமனையில், கடந்த 24 மணி நேரத்தில் குறைந்த எடையுடன் பிறந்த ஒன்பது பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்துள்ளன. அதேபோல், இதய நோயால் அவதிப்பட்ட இரண்டரை வயது குழந்தையும் நேற்று உயிரிழந்தது. இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டூவீலர் வீலிங் செய்தவர் கைதுராமநாதபுரத்தில் அடிக்கடி அதிக சிசி திறன் கொண்ட டூவீலர்களில் இளைஞர்கள் வீலிங், சாகசங்கள் செய்வதாக தொடர்ந்து போலீசாருக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து எஸ்.ஐ., பழனிக்குமார், எஸ்.எஸ்.ஐ., அய்யனார் அச்சுந்தன் வயல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். பைக்கில் வீலிங் செய்தபடி வந்த வாலிபரை மடக்கிப்பிடித்தனர். விசாரணையில் அவர் சூரன்கோட்டையைச் சேர்ந்த ஸ்டாலின் மகன் கார்த்திகேயன் 19, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் பைக்கை பறிமுதல் செய்தனர்.

கைதி தப்பி ஓட்டம்துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூரை சேர்ந்தர் நாராயணசாமி. கூலித்தொழிலாளியான இவர் டிச. 5ல் அப்பையநாயக்கன்பட்டி போலீசாரால் டூவீலர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டார். அன்று இரவே ரிமாண்டுக்காக சாத்துார் ஜே.எம்.1., நீதிபதி அனுராதா முன் ஆஜர்படுத்திய போது மனநலம் பாதிக்கப்பட்டவர் போல நடந்து கொண்டார். இதை தொடர்ந்து மருத்துவமனையில் பரிசோதித்து சான்று வழங்க நீதிபதி பரிந்துரைத்தார். டிச. 6 முதல் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கண்காணிப்பில் இருந்தார். இவருக்கு ஒரு எஸ்.எஸ்.ஐ., இரண்டு கான்ஸ்டபிள் என மூன்று போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று காலை 8:00 மணிக்கு போலீசார் ஷிப்ட் மாறும் நேரத்தில் ஒருவர் மட்டும் இருந்தார். இதை பயன்படுத்தி படுக்கையில் இருந்து நடந்த படி தப்பி ஓடினார். கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்ததில் நாராயணசாமி அரசு மருத்துவமனையில் முன்பக்க வாயில் வழியே வெளியேறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. போலீசார் தேடி வருகின்றனர். மனநலம் பாதிக்கப்பட்டவர் போல நடித்து அனைவரையும் நம்ப வைத்து ஏமாற்றி தப்பி ஓடியதாக கூறுகின்றனர்.

நடிகர் சீனிவாசனுக்கு பிடிவாரன்ட்செக் மோசடி வழக்கில் சென்னையை சேர்ந்த நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து ராமநாதபுரம் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆட்டோ டிரைவர் கொலைதிருநெல்வேலி, மேலப்பாளையம் அருகே முன்னீர்பள்ளத்தை சேர்ந்தவர் வீரபத்திரன், 27, லோடு ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் இரவில் அங்குள்ள பஸ் ஸ்டாப் அருகே நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த கும்பலால் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவர்களில் நால்வரை போலீசார் கைது செய்தனர்.

சிறுமிக்கு தொல்லை: ராணுவ வீரர் கைதுதிருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பாட்டன்வட்டத்தை சேர்ந்தவர் விஜயகாந்த், 32. மேற்கு வங்க மாநிலத்தில் ராணுவ வீரராக பணிபுரிகிறார். திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த, 4ம் தேதி விடுமுறையில் வந்த விஜயகாந்த், ஜோலார்பேட்டையில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்றார். மது போதையில் இருந்த அவர், நண்பனிடம் பேசிவிட்டு பைக்கில் வீட்டுக்கு புறப்பட சென்றார்.
சிறிது துாரத்தில் தனியாக இருந்த நண்பனின்,8 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். சிறுமி கூச்சலிடவே விஜயகாந்த் தப்பினார். ஜோலார்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஜயகாந்தை போக்சோவில் கைது செய்தனர்.

மூதாட்டி கொலை: குழந்தையுடன் தம்பதி கைதுதிண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் ஊராட்சி ஒன்றியம், பூத்தாம்பட்டியை சேர்ந்த பெரியசாமி மனைவி மாரியம்மாள், 70. இவரின் இரண்டு மகன்கள் திருமணமாகி தனித்தனியாக வசிக்கின்றனர். அவரது வீட்டின் அருகில் வடமதுரை கொல்லப்பட்டியை சேர்ந்த ஜெகநாதன், 30, மனைவி கவுசல்யா, 25, வசித்தனர். இவர்களுக்கு 4 வயது, 6 மாதம் என, இரு குழந்தைகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு மாரியம்மாள் வீட்டில் துாங்கிய போது கொலை செய்யப்பட்டார். அவரிடமிருந்து 5 சவரன் நகைகள் மாயமாகின. விசாரணையில் ஜெகநாதன், அவரது மனைவி இரும்புக் கம்பியால் மூதாட்டியை அடித்துக் கொலை செய்து, நகையை திருடியது தெரிந்தது.
போலீசார் விசாரித்து வந்த நிலையில், அந்த தம்பதி தங்களின் ஆறு மாத கைக்குழந்தையுடன் ஸ்ரீராமபுரம் வி.ஏ.ஓ., பாலசுப்பிரமணி முன்னிலையில் சரணடைந்தனர். இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆறு மாத குழந்தையுடன் அந்த பெண்ணும், கணவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.வாசகர் கருத்து (4)

 • பேசும் தமிழன் -

  இவன் அடுத்த கல்யாணம் செய்ய முடிவு செய்து விட்டான் போல் தெரிகிறது.....படத்தில் அழகுற இருக்கும் அந்த பிஞ்சு குழந்தையை கொல்ல அவனுக்கு எப்படியடா மனசு வந்தது ....இவன் ஆணுறுப்பை அறுத்து விட்டு வெளியே விட்டு விட வேண்டும்.....இப்போ போய் திருமணம் செய் என்று அனுப்பி விட வேண்டும்.

 • aaruthirumalai -

  இந்த நாய என்ன செய்யலாம்

 • Ram - ottawa,கனடா

  இதுலவேர பாவாடை சமூகத்துக்கு மாறியிருக்கான் போல

 • p.seetharaman - tirupur,இந்தியா

  .திருப்பூர் கொங்குமன் ரோடு கடைசில் கருப்பராயன் கோயில் உள்ளது .அதன் மேல் புரம் ரோட்டை பார்க்கவும்\பிறகு சொல்லவும் பணம் ஏப்பம் .

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement