Advertisement

வெள்ளத்தில் போன ரூ.4000 கோடி: பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

Audio இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

ADVERTISEMENT
நாகர்கோவில்: சென்னை பெருவெள்ளத்தை தடுக்க நான்காயிரம் கோடி ரூபாய் பேக்கேஜ் திட்டத்தில் மழை நீர் வழிந்து ஓடவில்லை. அந்த ரூபாய் தான் வழிந்தோடி உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.
நாகர்கோவிலில் அவர் கூறியதாவது: சென்னையில் பெருவெள்ளம் தொடர்கதையாக இருந்து வருகிறது. சாதாரண மக்கள் கூட பெரிய பாதிப்புக்கு ஆளாகின்றனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள மக்கள் சென்னையில் தங்கி கல்வி நிலையங்களில் படிக்கின்றனர்.இவர்கள் கூட இந்த மழை வெள்ளம் போன்றவற்றால் வேறு மாநிலங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறியதாக தெரிய வருகிறது.
நான்காயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் சென்னையில் பெருவெள்ளம் வந்தாலும் மக்களுக்கு எந்த பாதிப்பும் வராது. அவர்களை காப்பாற்ற முடியும் என தி.மு.க. அரசு உறுதி அளித்திருந்தது. ஆனால் இந்த மழைக்கு தாக்குப் பிடிக்க முடியவில்லை. நான்காயிரம் கோடி ரூபாய் எங்கே போனது. மழை நீர் வழிந்து ஓடவில்லை. மாறாக 4000 கோடி ரூபாய் தான் வழிந்து ஓடியுள்ளது.
சென்னையில் தி.மு.க. மாநகராட்சி நிர்வாகம் இருக்கிறது. இந்த மழைக்கு அவர்கள் எங்கே சென்றார்கள். தமிழக அரசு இனிமேலாவது எந்த திட்டத்திற்கு பணம் ஒதுக்கப்படுகிறதோ அதனை நிறைவேற்ற முன் வர வேண்டும். நான்காயிரம் கோடிக்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை அதற்குள் 5000 கோடி என்பது கேள்விக்குறியாக உள்ளது. இது பல்வேறு சந்தேகங்களையும் ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (23)

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  4000 கோடியில் 40 பர்சென்ட் கமிஷன் 1600 கோடி ரூபாய் மாப்ள கிட்ட குடுத்தாச்சி. பிறகு கட்சிக்கு 10 பர்சென்ட் 400 கோடி ரூபாய், சம்மந்தப்பட்ட டிபார்ட்மென்ட் மந்திரிகளுக்கு 10 பர்சென்ட் 400 கோடி ரூபாய் செட்டில் பண்ணியாச்சு. மாவட்ட செயலாளர், வட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர், மேயர், கவுன்சிலர், இளைஞர் அணி மகளிர் அணிக்கு எலும்புத்துண்டு போட்டது 10 பர்சென்ட் 400 கோடி ஆயிடுச்சி, வி.ஏ.ஓ தொடங்கி பியூன், க்ளெர்க், கான்ஸ்டபிள், அதிகாரிகள், செக்ரெட்டரியேட் வரை என்று ஒரு அஞ்சு பர்சென்ட் கூட கொடுக்கலீன்னா எப்படிங்க, அது ஒரு 200 கோடி. மொத்தம் மூவாயிரம் கோடி ஆயிடிச்சு. கான்டராக்டர் நியாயமான லாபம் ஜஸ்ட் பத்து பர்சென்ட் 400 கோடி ரூபாய். பாக்கி அறுநூறு கோடிக்கு சிமெண்ட் மூட்டை வாங்கி அடுக்கி வச்சிருந்தோம். அதுவும் கொட்டிய மழைல சிமெண்ட் மூட்டைகள் டேமேஜ் ஆகி ஆற்றில் அடித்துக்கொண்டு போய்விட்டது. ஆக அரசு மேற்கொண்டு ஒரு 500 கோடி ரூபாய் சேங்க்ஷன் பண்ணுனா காலி சாக்கை வங்காளவிரிகுடா கடலில் தேடிக்கொண்டு வந்து கொடுத்துடுவோம்.

 • Sivagiri - chennai,இந்தியா

  நாம பேசுறது யாருக்கும் புரிஞ்சிட கூடாது - யாரையும் காயப்படுத்த கூடாது - கேள்வி கேக்குறா மாதிரி தெரியணும் , ஆனா யாருக்கும் கேட்டுற கூடாது - இதிலிருந்தே தெரியுது இவர் அந்த 5000-கோடி வாங்கி குடுக்குறதுக்காக கடும் முயற்சி எடுக்கிறார்னு - தீயமுகவின் பழைய ஸ்லீப்பர் செல் தலைவர் - -

 • MADHAVAN - Karur,இந்தியா

  ஏரி ல வீயெடு கட்டிட்டு தண்ணி வடியலை விடியலை நா எப்புடி வடியும், மழை அளவு மிக அதிகம், அதை விட்டுட்டு இங்க வந்து கருத்துப்போடும் மூடர்களுக்கு,

  • பேசும் தமிழன் - ,

   ...அப்போ இப்போ தான் மழை பெய்யுதா ....போன ஆட்சியில் மழை பெய்த பொது ....உங்கள் விடியாத தலைவர் .....அரசியல் செய்யாமல் .... அவியலா செய்வோம் என்று கூறியது எந்த ரகம் ????

 • Duruvesan - Dharmapuri,இந்தியா

  ஆக மழை வரும் முன்பே தண்ணீர் முழுவதும் வற்ற செய்த வீடியலின் உழைப்பை கண்டு சங்கிகள் பொறாமை. எலெக்ஷன் அப்போ அந்த ஆரிய கீசோறு 360 கோடி, எலெக்ஷன் அப்போ மக்களுக்கு ஓட்டுக்கு பணம் குடுத்தது, குடுக்க போவது இதெல்லாம் தெரியல?ஆக சனா தானம் ஒயிக என சின்ன விடியல் சார் கூவுவார்

 • Sampath Kumar - chennai,இந்தியா

  வெள்ளநிவாரண நிதி காப்பது ஒன்றும் தவறு இல்லை எங்க காசை தான் நகல் கேக்கின்றோம் உன் அப்பன் வீடு காசு இல்லை கங்கையை சுத்த படுத்துகின்றோம் என்று ஆருயிராம் கோடியை ஆட்டைய போட்ட உங்க அரசு அதுக்கு உங்களிடம் பதில் இருக்கா

  • தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா

   உன்னை போல கூமுட்டைகளை வைத்து இந்த ஊழல் ஆட்சி நடக்கிறது

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement