Advertisement

சபரிமலையில் மனநிறைவான தரிசனத்திற்கு நடவடிக்கை

Audio இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

ADVERTISEMENT

சபரிமலை : சபரிமலையில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், பக்தர்களுக்கு சிறப்பான தரிசனம் கிடைக்கும் வகையில், தேவசம்போர்டு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதில் முக்கியமாக, மரக் கூட்டத்திலிருந்து சரங்குத்தி வரும் பாதையில், ஆறு கியூ காம்ப்ளக்ஸ்கள் அமைக்கப்பட்டு, அங்கு குடிநீர், பிஸ்கட், கழிவறை போன்ற வசதிகள் வழங்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

சன்னிதானத்தில் இருக்கும் கூட்டத்தை பொறுத்து பக்தர்கள் எத்தனை மணிக்கு அங்கு செல்ல முடியும் என்பதை அறிவிக்கும் வகையில் பெரிய, எல்.இ.டி., டிஸ்ப்ளே வைக்கப்பட்டுள்ளன.

சரங்குத்தியிலிருந்து பக்தர்கள் பெரிய நடை பந்தலுக்கு வரும் பாதையில் அமைக்கப்பட்டு உள்ள கூரைகளில் மின் விசிறி அமைக்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

பெரிய நடை பந்தலில் தற்போது மூன்று பெரிய ராட்சத மின்விசிறிகள் நிறுவப்பட்டுள்ள நிலையில், மண்டல சீசன் முடிந்தவுடன் மேலும் நான்கு மின் விசிறிகள்அமைக்கப்படுகிறது.

இதனால் மலையேறி களைப்பில் வரும் பக்தர்களுக்கு நல்ல இதமான காற்று கிடைக்கும். கூட்டம் அதிகமாக உள்ள நிலையில் தரிசனம் முடிந்த பக்தர்கள் உடனடியாக ஊருக்கு திரும்ப வேண்டும் என்று தேவசம்போர்டு தொடர்ந்து ஒலி பெருக்கியில் அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.

நெரிசலை தவிர்ப்பதற்காகவே இந்தநடவடிக்கை.

சபரிமலையில் தற்போது விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், இரவு நேரத்தில் வரும் பக்தர்கள் தங்குவதற்கு, 'விரி' எனப்படும் தங்கும் இடங்கள் உள்ளன.

முக்கியமாக அன்னதான மண்டபத்தின் மேற்பகுதியிலும் பாண்டி தாவளம் பகுதியில் உள்ள ஷெட்டுகளிலும் பக்தர்கள் தங்குகின்றனர்.

இங்கே 24 மணி நேரத்துக்கு ஒரு பக்தரிடம் 30 ரூபாய் வசூலிக்கப்படும். பத்து ரூபாய் பாய் வாடகை. 4 வயதுக்குஉட்பட்ட சிறுவர்களுக்கு கட்டணம் கிடையாது.

பாண்டி தாவளத்தில் மாகுண்டா ஐயப்ப நிலையம் என்ற பெரிய ஷெட்டில் பக்தர்கள் இலவசமாக தங்கலாம்.

இந்த வசதிகளை துவக்கி வைத்து பிரசாந்த் பேசியதாவது:

காடு, மலை கடந்து சபரிமலை வரும் பக்தர்களுக்கு, மனநிறைவான தரிசனம் கிடைக்க புதிய கியூ காம்ப்ளக்ஸ் சிஸ்டம் உதவும். பக்தர்கள் நீண்ட நேரம் கியூவில் நின்று, தளர்ச்சி அடையும் நிலை முழுமையாக மாற்றப்படும்.

இவ்வாறு அவர்பேசினார்.



வாசகர் கருத்து (3)

  • V GOPALAN - chennai,இந்தியா

    Letdurga Ammaiyar can come and see our Ammamandapam River condition. She should take bath once. Locals are allowed by the corporation to use the Amma Mandapam as Public Toilet. Cauvery rever is park now with high rise Grass

  • V GOPALAN - chennai,இந்தியா

    We request Sekar Babu to read this. In Srirangam devotees who are all coming across India and foreigners getting shocked to see the Amma Mandapam River condition. All local are urinating and completing their morning removal on the bank itself. No place to take bath. Stalin Udayanidhi will not visit to these places to know how tourist are suffering like anything. Dharshan in small entrance 10 volunteers and literally pushing even the oldest in a fraction of second. They will ensure no one to have complete and full dharshan up to ranganath PADHAM. They remove all slabs so that while coming out also no one can have glimpse the face of God. This sekar Babu visiting sabarimal every month. We pray his eyes should be blind soon. People are imagening the Cauvery river and kollidam river in photos and getting shocked to see the ugly condition. Now river cauvery near Amma Mandapam like a park

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    திருப்பதியில் கொடுப்பதுபோல உப்புமா, பால் போன்றவைகளும் கொடுக்கலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement