Advertisement

சென்னை மேயர் பிரியா காய்ச்சலால் பாதிப்பு

ADVERTISEMENT
சென்னை, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, 'மிக்ஜாம்' புயல் அன்றும், அதற்கு முன், பின் என, இரவு, பகலாக தொடர்ந்து, மழை வெள்ள பணிகளை, நேரில் ஆய்வு செய்து விரைவுப்படுத்தினார். குறிப்பாக, புயல் பாதிப்பின்போது, நள்ளிரவிலும் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில், தொடர்ந்து ஓய்வு இல்லாமல் பணியாற்றி வந்த மேயர் பிரியா, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து, மாநகராட்சி தரப்பில் கூறுகையில், 'மழை வெள்ள பாதிப்புகளில் ஓய்வெடுக்காமல் தொடர்ந்து மேயர் பிரியா பணியாற்றி வந்தார்.

இதனால், உடல்நிலை பாதிக்கப்பட்டு கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், ஓரிரு நாளில் பணிக்கு திரும்புவார்,'' என்றனர்.

 சென்னை மாநகராட்சி மேயராக உள்ள பிரியா, ஓட்டேரி 74வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இப்பகுதியில், அமைச்சர் சேகர்பாபுவின் வீடு உள்ள சாலை பகுதியில் மட்டும் மழைநீர் தேங்காமலும், மின் துண்டிப்பு இல்லாமலும் இருந்துள்ளது. ஆனால், சுற்றுவட்டார பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன.

இரு நாட்களுக்கு முன் ஓட்டேரி, கிருஷ்ணப்பதாஸ் சாலையில், பொது மக்களை சந்தித்து ஆறுதல் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்க சென்ற மேயர் பிரியாவை, பொது மக்கள் முற்றுகையிட்டு சரமாரி கேள்வி கேட்டனர்.

அந்த வீடியோ, நேற்று சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. சில நாட்களாக தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த வீடியோ வேகமாக பரவியது.



வாசகர் கருத்து (26)

  • V GOPALAN - chennai,இந்தியா

    Over make up. Must be allergic. She would not have taken bath for a week because of Drainage water in Corporation water

  • Srinivasan Narayanasamy - Doha,கத்தார்

    ஒரு ஊசி போட்ட சரியாப்போயிடும் ....

  • Jambavaan - Chennai,இந்தியா

    காய்ச்சல் இல்லை அசதி

  • வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்

    என்னது மக்கள் இவங்களை கேள்விக்கணைகளால் காய்ச்சி எடுத்தினால் காய்ச்சல் வந்ததா? மக்கள் பணம் அரசு கையில் நல்ல காச செலவு செஞ்சு கஜானா காலி பண்ணிட்டு மக்களிடமே கையேந்துங்க..

  • Indhuindian - Chennai,இந்தியா

    தடுப்பூசி போடக்கூட டயம் இல்லாம இப்படி சீக்காயிட்டாங்களே

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement